வியட்நாமில் குழந்தைகளிடையே பரவிவரும் புதுவித வைரஸ் நோய்க்கு 81 குழந்தைகள் பலியாகியுள்ளனர்.
வியட்நாமில் குழந்தைகளிடையே புதுவித வைரஸ் நோய் பரவி வருகிறது. இந்த நோய் குழந்தைகளின் கை, கால் மற்றும் வாய்ப்பகுதியில் எற்படுகிறது. இந்த ஆண்டு மட்டும் வைரஸ் நோய் தாக்கி 32,588 குழுந்தைகள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் இதுவரை 81
குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இந்த நோய் பாதித்த குழந்தைகளுக்கு முதலில் காய்ச்சல் ஏற்படுகிறது. பின்னர், வாய் மற்றும் கை, கால்களில் எரிச்சலுடன் கூடிய புண் உண்டாகிறது ஆனால் நோயை குணப்படுத்த மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் இல்லை. இருந்தும் பலர் சிகிச்சை இன்றி குணமாகி வருகின்றனர். சில இடங்களில் குழந்தைகளின் மூளையில் வீக்கம் ஏற்பட்டு அதன் மூலம் வலிப்பு நோயினால் உயிரிழக்கும் சம்பவங்களும் நடைபெறுகின்றனர். இந்த தகவலை வியட்நாம் பிரதமர் குயன் தன் சங் தெரிவித்துள்ளார். நோய் மேலும் பரவாமல் தடுக்க சுகாதார அமைச்சகத்துக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் சுகாதார சீர்கேட்டை போக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படியும் மக்களை கேட்டு கொண்டுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக