தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

7.8.11

எப்.பி.ஐ.-யால் 40 ஆண்டுகளாக தேடப்படும் விமான கொள்ளையன்

வாஷிங்டன், ஆக. 7-   டி.பி. கூப்பர், இந்த பெயரை கேட்டால் அமெரிக்க புலானாய்வு அமைப்பிற்கு (FBI) எரிச்சல் வரும், 40 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு விமான கடத்தல் மற்றும் கொள்ளையில் ஈடுபட்ட சம்பவம் அமெரிக்க வரலாற்றில் ஒரு விநோத வழக்காக அமைந்துவிட்டது. விமான கடத்தல்காரன், கொள்ளையனை எப்.பி.ஐ.யினர் இன்னும் தேடி வருகின்றனர். இது குறித்து அமெரிக்காவிலிருந்
து வெளிவரும் 'டைம்' பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ள சிறப்பு செய்தியில்கூறப்பட்டிருப்பதாவது:
கடந்த 1971-ம் ஆண்டு நவம்பர் மாதம், அமெரிக்காவின் போர்லாண்ட் மாகாணத்திற்கு சொந்தமான வடமேற்கு விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானத்தில் 42 பயணிகளுடன், டான் கூப்பர் என்ற பெயருடன் கொள்ளையன் பயணித்தான். கருப்பு கண்ணாடி, கருப்பு கோட், சூட் என வந்த கூப்பரை அவ்வளவாக யாரும் அடையாளம் காணவில்லை, விமானமும் புறப்பட்டது. சுமார் 10 ஆயிரம் அடி உயரத்தில்பறந்து கொண்டிருந்தது.
பறக்கும் விமானத்தில் சக பயணிகளை மிரட்டி 2 லட்சம் டாலர் கரன்சிகளை கொள்ளையடித்து விமானத்தின் பின்பக்க அவரசர வழியினை உடைத்து பாராசூட் மூலமாக குதித்து மாயமாகிப்போனவன் தான் டி.பி. கூப்பர். இந்த சம்பவம் நடந்து இன்று 40 ஆண்டுகள் ஆகிவிட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்த எப்.பி.ஐ. இன்னும் விமான கொள்ளையனை தேடி வருகிறது. 30 நிமிடங்கள் நடந்த இந்த சம்பவத்தின் போது விமானம் அமெரிக்காவின் சீட்டெல் டகோமா விமான நிலையம் இறங்குவதாக திட்டமிடப்பட்டிருந்தது. அப்போது கூப்பர் விமானப்பணி பெண்ணை அழைத்து குடிக்க விஸ்கி கேட்டுள்ளான். அவரும் எடுத்து வருவதற்குள் , சக பயணிகளை நோக்கி தான் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும், சற்று நேரத்தில் வெடித்துவிடும் என மிரட்டவே, சக பயணிகள் அலறினர். அவர்களிடம் உள்ள கரன்சிகளை கேட்டு மிரட்டினான். பின்னர் ஒரு சூட்கேசில் சக பயணிகளின் கரன்சிகளை திணித்து கொண்டான். இந்த கரன்சிகளின் மதிப்பு 2 லட்சம் டாலர் என கணக்கிடப்பட்டுள்ளது. நேராக பைலட்டின் கேபின் அறைக்கு சென்று விமானத்தை மெக்சிகோவிற்கு கொண்டு செல்லுமாறு கூறினான். பின்னர் தான் தயாராக வைத்திருந்த 2 பாராசூட் மூலம் விமானத்தின் பின்பக்கமுள்ள அவசர வழியாக குதித்து தப்பியோடினான். இந்த சம்பவம் குறித்து எப்.பி.ஐ.யினர் விசாரணையில் இறங்கியுள்ளனர். ஆனால் 40 ஆண்டுகள் ஆகியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
கொள்ளை நடந்த போது விமானத்தில் பதிந்துள்ள கூப்பரின் கைரேகைளை பதிந்து மரபணு சோதனை செய்து இதுவரை 1000-த்திற்கும் மேற்பட்டவர்களை விசாரித்து உள்ளனர். சக பயணிகள் தெரிவித்த அடையாளத்தை கொண்டு வரைபடத்தினையும் வெளியிட்டுள்ளனர். ஆனால் எந்த ஆதாரமும் சிக்கவில்லை. இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 3-ம் தேதி எப்.பி.ஐ. அலுவலகம் வந்திருந்த அமெரிக்காவைச் சேர்ந்த மார்லா கூப்பர் என்ற பெண், தனக்கு எட்டு வயதாக இருந்த போது எல்.டி. கூப்பர், டி.பி. கூப்பர் என்ற இரு உறவினர்கள் இருந்தனர் (மாமா) என்றும், அவர்களில் ஒருவர் காணாமல் போய்விட்டதாக எப்.பி.ஐ.யிடம் கூறியுள்ளார். தற்போது இந்த ஆதாரத்தை வைத்து எப்.பி.ஐ. அதிகாரிகள் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.

0 கருத்துகள்: