அல்ஜசீராவின் the stream பகுதியில் இடம்பெற்ற இலங்கையின் தற்போதைய நிலவரம் பற்றிய ஓர் கருத்து விவாதமிது. இலங்கை தமிழர்கள் மறக்கடிக்கப்பட்டுவிட்டார்களா?
எனும் தொணியில் இடம்பெற்றிருக்கும், இக்கருத்து விவாதத்தில், டுவிட்டர், பேஸ்புக், வலைப்பதிவுலகத்தினர் என பல்வேறு தரப்பினரின் கருத்துக்களையும், அவர்கள் அனுப்பிய வீடியோ, படங்கள் என்பவையும் இணைக்கப்பட்டுள்ளன.
2009 உடன் 30 வருட கால சிவில் யுத்தம் முடிவுக்கு வந்துள்ளது. ஆனால் இன்னமும் இலங்கை சிறுபான்மை இன தமிழ் மக்கள் சந்திக்கும் பிரச்சினைகள் கவனிக்கப்படாது உள்ளனவா?
யுத்தத்தால் அழிவடைந்த வடக்கு கிழக்கு பகுதிகளை மீள் நிர்மாணம் செய்வதாக இலங்கை அரசு வாக்குறுதி கொடுத்திருந்தது. ஆனால் அது நடந்ததா? அல்லது இன்றைய சர்வதேச முக்கிய விவகாரங்களிலிருந்து இவ்விடயம் மறக்கடிக்கப்பட்டு விட்டதா?
யுத்தம் முடிவடைந்துவிட்டதாகவே இருக்கலாம். ஆனால் பழைய பாரபட்சங்கள் இன்னமுமம் உழல்கின்றனவா? என்ற கேள்விகளை முன்வைத்து, கருத்துக்களை அனுப்புமாறு கோரியிருந்தோம்.
எமக்கு கருத்துக்கள் தெரிவித்த பலர் டுவிட்டர், பேஸ்புக் மூலமாக கலந்து கொண்ட பெரும்பாலானோர் சேனல் 4 வெளியிட்ட இலங்கையின் கொலைக்களம் ஆவண தொகுப்பையே பதிலாக அனுப்பியுள்ளனர்.
யூடியூப்பில் மாத்திரம் இதுவரை 60,0000 ற்கு மேற்பட்டோர் அந்த வீடியோவை பார்த்திருக்கிறார்கள்.
இலங்கையில் மனித உரிமை மீறப்பட்டுள்ளதற்கும், போர்க்குற்றம் நடைபெற்றுள்ளதற்கும், ஓர் ஆணித்தரமான ஆதாரமாக இந்த வீடியோ காணப்படுவதாக, சேனல் 4 அறிவிப்பாளர் கூறுகிறார். தமிழர்களின் இன்றைய நிலை பற்றி நாம் கேட்டிருந்த கேள்விகளுக்கு, 75 க்கு மேற்பட்ட டுவிட்டர் பதில்கள் கிடைத்தன.
இதில் பெரும்பாலோனோர் தெரிவித்த கருத்துக்கள், இலங்கை அரசு தற்போது வடக்கு, கிழக்கில் மேற்கொள்ள தொடங்கியிருக்கும் அபிவிருத்தி வேலைப்பாடுகள், தமிழர்களுக்கு உதவியானதாகவே இருக்கும் என்றனர்.
இதையடுத்து நாம் மேற்கொண்ட கருத்து விவாதத்தில், இலங்கை வலைப்பதிவாளர்கள் இந்தி சமரஜீவ மற்றும் குமாரவடிவேல் குருபரன் ஆகியோர் இணைந்து கொண்டனர். நீங்கள், தமிழர்கள், சிங்களவர்கள் என்ற நிலையில் விவாதிக்கிறீர்கள். நான் உண்மையில் நினைப்பது, இலங்கையர் என்ற நிலையிலிருந்தே. இப்போதைய கேள்வி எப்படி இலங்கையை மீள கட்டி எழுப்புவது என்பதே. என இந்தி சமரஜீவ கூறினார். மோதல் உருவானதற்கான அடிப்படையான காரணங்கள் இன்னமும் அப்படியே உழல்கிறது என குமாரவேல் குருபரன் தெரிவித்தார்.

- இவ்வாறு இக்கருத்து விவாதம் தொடர்பான அல்ஜசீராவின் விளக்கம் தொடர்கிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக