தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

3.6.11

பக்குவமாக எடுத்துச்சொன்ன காங்கிரஸ் இப்போது பாய்கிறது - 'குரு ராம்தேவ் ஒரு யோகியே இல்லையாம்'



உண்ணாவிரதமிருந்து பிரச்சினையை பெரிதாக்காதீர்கள் என ராம்தேவிடம் நேற்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பிரணாப் முகர்ஜி, கபில் சிபில், பி.கே.பன்சால், சுபோந்த், காந்த் சகாய் மற்றும் பிரதமரின் முதன்மை செயளர் டி.கே.ஏ.நாயர் ஆகியோர் ராம்தேவை நேரடியாக சந்தித்து இக்கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர்.


இந்நிலையில், ராம்தேவுக்கு விமானநிலையம்
வரை சென்று வந்து இவ்வளவு மரியாதை கொடுப்பது அனாவசியமானது. இதை செய்தது மத்திய அரசு தான். காங்கிரஸுக்கும் இதற்கும் தொடர்பில்லை காங்கிரஸ் பொதுச்செய்தியாளர் திக்விஜய் சிங் கூறியுள்ளார்.


மேலும், ராம்தேவ் ஒரு யோகா குருவே அல்ல. அவர் ஒரு செல்வந்த வியாபாரி. தனது யோகா மையத்தின் மூலம், ரூ. 15,000 கோடி மதிப்புள்ள மருத்துவமனை, யோகா மையம், ஆயுர்வேத மருந்து நிறுவனங்கள் ஆகியவற்றை நடத்தி வருகிறார். ஸ்கட்லாந்தில் பல மில்லியன் பவுன் செலவில் ஒரு தனித்தீவையே விலைக்கு வாங்கி வைத்துள்ளார். பயணத்திற்கென தனி விமானத்தை பயன்படுத்துகிறார்.


இதெல்லாம் அவர் ஒரு சந்நியாசி அல்ல, வியாபரியே என்பதற்கு நல்ல உதாரணம். யோகா கற்றுத்தருவதற்கு அவரது வகுப்புக்களில் முன்வரிசை ஆசனங்களுக்கு ரூ.50 ஆயிரமும், அடுத்த வரிசை அமர்வுகளுக்கு ரூ.30 ஆயிரமும் செலவிடுகிறார்கள். இதெல்லாம் வியாபரம் தானே. என அவர் கடுமையாக சாடியுள்ளார்.


மத்திய அரசு ராம்தேவை சமாதானப்படுத்தி எப்படியும் அவரது உண்ணாவிரத போராட்டத்தை தடுக்கும் முயற்சியில் ஈடுபடு கடும் பிரேயத்தனம் செய்துவரும் நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் திக்விஜய் சிங் அவரை ஒரு வியாபாரி என வர்ணித்திருக்கிறது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 கருத்துகள்: