தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

8.5.11

பாக் எச்சரிக்கையை மீறி அமரிக்கா மீண்டும் ஏவுகணைத் தாக்குதல்

மீரான்ஷா பாகிஸ்தானில் உள்ள வடக்கு வசீரிஸ்தான் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது அமெரிக்க ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் அந்த வீட்டில் இருந்த 8 தீவிரவாதிகள் பலியானார்கள். பின்லேடன் சுட்டுக்கொல்லப்பட்ட பிறகு நடந்த முதல் ஏவுகணை தாக்குதல் இது ஆகும்.
பாகிஸ்தானின் எச்சரிக்கையையும் மீறி இன்று அந்த நாட்டுக்குள் டிரோன் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது அமெரிக்கா. இதில் 8 பேர் உயிரிழந்தனர்.

அபோத்தாபாத் தாக்குதலால் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ள பாகிஸ்தான், தனது நாட்டு எல்லைக்குள் அத்துமீறியத் தாக்கிய அமெரிக்காவை கண்டித்துள்ளது. தொடர்ந்து இதுபோல தாக்குதல்களை நடத்த அனுமதிக்க மாட்டோம் என்றும் அது கூறியுள்ளது.
ஆனால் அந்த எச்சரிக்கையை அமெரிக்கா புறக்கணித்து விட்டது. இன்று வடக்கு வசிரிஸ்தான் பகுதியில் தத்தா கேல் என்ற இடத்தில் அமெரிக்க ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 8 பேர் உயிரிழந்தனர்.
பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்ட கையோடு மீண்டும் ஏவுகணைத் தாக்குதலில் அமெரிக்கா ஈடுபட்டிருப்பதால் பாகிஸ்தான் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளது.

0 கருத்துகள்: