தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

22.4.11

மருத்துவத்துக்காக அமெரிக்கர்கள் இனி இந்தியா செல்ல வேண்டாம்: ஒபாமா அறிவிப்பு


வாஷிங்டன், குறைந்த செலவிலான மருத்துவத்துக்காக அமெரிக்கர்கள் இனி இந்தியா செல்லவேண்டியதில்லை என்றும் குறைந்த செலவிலான மருத்துவ வசதிக்கு அமெரிக்காவிலேயே வழங்கப்படும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா அறிவித்தார்.
அமெரிக்காவில் வர்ஜீனியாவில் உள்ள சமுதாய கல்லூரியில் நடந்த விழாவில் கலந்து கொண்டு ஒபாமா பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
குறைந்த செலவிலான மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கர்கள் இந்தியாவுக்கோ, பிரேசிலுக்கோ செல்ல வேண்டிய நிலை இனி ஏற்படக்கூடாது
என்பது தான் என் ஆசை. குறைந்த செலவில் தரமான மருத்துவ வசதியை நீங்கள் இங்கேயே பெற வேண்டும் என்று விரும்புகிறேன்.
அமெரிக்காவில் மருத்துவ செலவை குறைக்க நாம் முயற்சி மேற்கொள்ள வேண்டும். அப்படி நாம் குறைத்து விட்டால் அது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
அமெரிக்காவில் மருந்து விலை அதிகமாக உள்ளது. கனடாவை விட, மெக்சிகோவை விட மருந்து விலை 20 முதல் 30 சதவீதம் விலை அதிகம் உள்ளது. இதை குறைக்க மருந்து தயாரிப்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்படும் மருந்துகளின் விலை வெளிநாடுகளை விட இங்கு ஏன் அதிக விலைக்கு விற்கப்படுகிறது எனக்கு புரியவில்லை. மருந்துகளின் விலையை குறைப்பதற்கு சில சிஸ்டங்களை நாம் மாற்ற வேண்டும். இவ்வாறு ஒபாமா பேசினார்.

0 கருத்துகள்: