தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

10.4.11

ஜி.சி.சியின் மத்தியஸ்தம்:அலி அப்துல்லாஹ் ஸாலிஹ் நிராகரிப்பு


ali abdullah saleh
ஸன்ஆ:யெமன் அதிபர் அலி அப்துல்லாஹ்  ஸாலிஹிற்கு எதிராக மக்கள் எழுச்சி தொடரும் வேளையில் வளைகுடா நாடுகள் முன்வந்து நடத்திய மத்தியஸ்த முயற்சி தோல்வி அடைந்துள்ளது.நேற்று தேசிய தொலைக்காட்சியில் தோன்றி உரை நிகழ்த்திய அலி அப்துல்லாஹ் ஸாலிஹ், பதவி விலகல் தொடர்பான செய்திகளை மறுத்தார்.மேலும் வளைகுடா நாடுகளின் மத்தியஸ்த வாக்குறுதியை நிராகரித்துள்ளார்.

ஸாலிஹ் தொலைகாட்சியில் கூறியதாவது :  நாங்கள் சுதந்திரமாக பிறந்தோம். சுதந்திரத்தை தான் எப்பொழுதும் விரும்புகிறோம்.எங்களுடைய விருப்பங்களை அவர்கள் மதிக்க வேண்டும்.ஜனநாயகத்திற்கும், அரசியல் சட்டத்திற்கும் எதிரான அனைத்து முயற்சிகளையும் நாங்கள் புறக்கணிக்கிறோம்.மக்களிடமிருந்துதான் அதிகாரம் வருகிறது.கத்தரிடமிருந்து அல்ல.இது யெமனின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதாகும்.இவ்வாறு ஸாலிஹ் தெரிவித்துள்ளார்.
முன்னர் யெமன் அதிபர் ஸாலிஹ் பதவி விலகுவது தொடர்பாக சம்மதிக்க வைக்கலாம் என வளைகுடா நாடுகளின் எதிர்ப்பார்ப்பதாக கத்தர் பிரதமர் ஷேக் ஹமத் பின் ஜஸீம் அல்தானி தெரிவித்திருந்தார்.யெமன் அதிபரும், எதிர்தரப்பினரும் ஒப்பந்தம் மேற்கொள்ள சவூதி அரேபியா, கத்தர், யு.ஏ.இ, குவைத், ஒமான், பஹ்ரைன் ஆகிய நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சவூதி அரேபியாவில் கூடி விவாதித்திருந்தனர்.

0 கருத்துகள்: