தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

2.4.11

லிபிய போராளிகளுக்கு உதவ சிஐஏ ஏஜண்ட்களா?


spy
வாஷிங்டன்:லிபியாவின் போராளிகளுக்கு உதவுவதா வேண்டாமா என்ற விவாதம் வெள்ளை மாளிகையில் நடந்து கொண்டு இருக்கும் பொழுதே ஒரு சிறிய குழுவினரை சிஐஏ லிபியாவிற்குள் அனுப்பியுள்ளது.
மேற்குலகின் இடைபாடு இல்லாமல் போராளிகளின் போராட்டம் வெற்றிபெற இயலாது என்ற அமெரிக்காவின் கருத்தை போராட்டக் களத்தின் ஒவ்வொரு நிகழ்வும் வலுப்பெறச் செய்கின்றதாக அமெரிக்காவின் மூத்த உளவுத்துறை அதிகாரி தெரிவிக்கிறார்.

கடந்த புதன்கிழமை(30.03.2011) வெள்ளை மாளிகையின் பத்திரிக்கை தொடர்பு செக்ரட்டரி ஜே கேர்னி கூறுகையில்;”லிபியாவின் எந்த ஒரு குழுவுக்கும் ஆயுதங்களை அனுப்புவது பற்றி எந்த ஒரு முடியும் எடுக்கப்படவில்லை. உதவியளிக்க வேண்டும் என்றோ கூடாது என்றோ முடிவு எடுக்கப்படவில்லை.” என்றார்
“சிஐஏவின் பெரிய பங்கு என்ன என்பது சரியாக தெரியவில்லை. லிபியாவில் போராடும் குழுக்களை தொடர்பு கொண்டு அவர்களது வலிமையை அறியவும் மேலும் அவர்களுக்கு உதவி செய்யவும் ஒபாமா முடிவெடுத்தார். எப்படிபட்ட உதவிகளை வழங்க வேண்டும் என்பதை முடிவு செய்வதற்காக சிஐஏ தங்களது அதிகாரிகளை அனுப்பியிருக்கலாம்.” என்று ஒரு உளவுத்துறை நிபுணர் கூறுகிறார்.
சிஐஏவின் லிபிய அலுவலகம் மூடப்பட்டு விட்டது என்று பெயரை  தெரிவிக்க விரும்பாத ஒரு அமெரிக்க அதிகாரியும் முன்னால் உளவுத்துறை அதிகாரியும் தெரிவிக்கிறார். லிபியாவின் உளவு வேலைகளை துபையிலிருந்து செய்து வருவதாகவும் தெரிவிக்கிறார் அவர்.
எஃப்-15இ என்ற விபத்துக்குள்ளான தாக்குதல் விமானத்தின் விமானியை முதலில் போராட்டக்காரர்கள் காப்பாற்றினார்கள் அவ்விமானியை சிஐஏவினர் உதவியுடன் அமெரிக்கர் மீட்டெடுத்தனர்.
சிஐஏவின் உளவாளிகளும் பிரிட்டிஷ் உளவாளிகளும் விமானத் தாக்குதல்களை வழி நடத்துவதற்கு என்று லிபியா சென்றுள்ளனர் என்று முதலில் நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது.
லிபியாவின் தரைச் சண்டையில் அமெரிக்காவின் தரைப் படையினர் உபயோகப்படுத்தப்பட மாட்டார்கள் என்று திங்கள் கிழமையன்று ஒபாமா தனது தேசிய அறிவிப்பில் கூறியிருந்தார். இருந்த போதிலும் அவரது கூற்று லிபியாவின் போராளிகளுக்கு உதவி செய்ய முடிவு எடுக்கும் பட்சத்தில் எப்படி போர்த் தடவாளங்களை அனுப்புவது மேலும் அவர்களை எப்படி பயிற்றுவிப்பது போன்ற விசயங்களைப் பற்றி ஆராய்ந்து வருகிறோம் என்ற கூற்றிலிருந்து ஒபாமாவின் வார்த்தைகள் பலவித உள் அர்த்தங்களுக்கு இடம் கொடுக்கின்றன.
இந்த மாதிரியான சூழலில் ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஈராக் போன்று சிஐஏ முன்னின்று இதுபோன்ற நிகழ்வுகளை முன்னெடுத்துச் செல்லும் என்று கருதப்படுகிறது.
இதுபோன்ற சதித் திட்டங்களில் சிஐஏவின் அதிகாரிகளுடன் சிறப்புப் பயிற்சி பெற்ற வீரர்களும் லிபியாவிற்குள் அனுப்பப்படுவர்.
இராணுவத் தளவாடங்களையும் அதனை எப்படி உபயோகப்படுத்துவது என்ற பயிற்சி கொடுப்பதும் அவர்கள் வேலையாகும்.
இவ்விசயம் குறித்து சட்டம் இயற்ற சட்டம் இயற்றும் அதிகாரிகளுடன் (லா மேக்கர்ஸ்) பாதுகாப்பு செக்ரட்டரி ராபர்ட் கேட்ஸ், உள்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், ஜாபின் சீஃப் ஆஃப் ஸ்டால் சேர்மன் அட்மிரல் மைக் முல்லன் மற்றும் உளவுத்துறை தலைவர் ஜேம்ஸ் கிளாப்பர் ஆகியோரைச் சந்தித்தனர்.
இதுவரை 550 மில்லியன் டாலரை பெண்டகன் இரைத்துள்ளது என்று தெரிய வருகிறது. மேலும் மாதத்திற்கு 40 மில்லியன் டாலர் இதற்காக செலவாகும் என்று தெரிய வருகிறது. செலவழிக்கும் பணத்தை அமெரிக்கா எப்படி இலாபத்துடன் எடுக்கும் என்பது ஈராக்கிலிருந்தும், ஆஃப்கானிலிருந்தும் நமக்குத் தெரியத்தானே செய்தது.

0 கருத்துகள்: