தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

24.12.12

அமெரிக்காவில் மீண்டும் ஒரு வெறியாட்டம். கிறிஸ்துவ ஆலயத்திற்குள் புகுந்து சரமாரியாக சுட்ட மர்ம நபர்.


அமெரிக்காவில் கிறிஸ்தவ ஆலயம் மற்றும் வீடுகளில் புகுந்து மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டு வெறியாட்டம் நடத்தினான். இதில் பெண் உள்பட 3 பேர் செத்தனர். பிறகு தாக்குதலில் ஈடுபட்ட நபரை போலீசார் சுட்டுக் கொன்றனர்.அமெரிக்காவில் கனெக்டிகட் மாகாணத்தில் நியூடவுன் நகரிலுள்ள தொடக்கப் பள்ளிக்கூட்டத்தில் கடந்த 14–ந் தேதி ஆடம் லான்ஸா (வயது 20) என்ற வாலிபர் புகுந்து 20 குழந்தைகள், 6 ஆசிரியர்களை துப்பாக்கியால் சுட்டு கொன்றான். தனது தாயையும், அவன் கொன்றதுடன்,

தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்தான். இந்த கொடூர சம்பவம் அமெரிக்காவில் பெரும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியது. துப்பாக்கி வன்முறையை தடுக்க
மீண்டும் வெறியாட்டம்
கடுமையான சட்டம் கொண்டு வர வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில் அங்குள்ள பென்சில்வானியா மாகாணத்தில் மற்றொரு துப்பாக்கி சூடு வெறியாட்டம் நடந்துள்ளது.
www.thedipaar.com

துப்பாக்கி சூடு–3 பேர் பலி
பென்சில்வானியா மாகாணத்தில் பிட்ஸ்பெர்க் நகருக்கு 160 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் பிராங்ஸ்டவுன் என்ற ஊரிலுள்ள கிறிஸ்தவ ஆலயத்திற்குள் ஒரு மர்ம நபர் நேற்று முன்தினம் இரவு நுழைந்தான். அவன் திடீரென்று தன்னிடம் இருந்த கைத்துப்பாக்கியால் சுட்டான். இதில் ஒரு பெண் குண்டு பாய்ந்து பரிதாபமாக செத்தார். பின்னர் அந்த மர்ம நபர் அருகிலுள்ள 2 வீடுகளிலும் புகுந்து 2 பேரை சுட்டுக் கொன்றான். அவனுடைய இந்த தாக்குதலுக்கு 3 பேர் இறந்தனர்.
www.thedipaar.com
கொலை வெறியனும் சாவு
இதுபற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இதற்கிடையே மர்ம நபர் வேனில் ஏறி தப்பினான். இதனால் அவனை வளைத்து பிடிக்க போலீசார் முயன்றனர். போலீஸ் வாகனத்தை நோக்கியும் அவன் சுட்டான். உடனே போலீசார் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் கொலைவெறியன் செத்தான். இச்சம்பவத்தில் 3 போலீசார் காயம் அடைந்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று 3 பேரும் வீடு திரும்பினர்.
காரணம் என்ன?
சம்பவத்தில் கொல்லப்பட்ட மர்ம நபர் மற்றும் 3 பேர் பெயர் விவரத்தை போலீசார் வெளியிடவில்லை. இதுபற்றி போலீஸ் அதிகாரி கூறுகையில், ‘துப்பாக்கி சூடு நடத்தியவனுக்கும், பலியானவர்களுக்கும் தொடர்பு இல்லை. எனவே குடும்ப பிரச்சினை அல்லது முன்விரோதத்தில் இச்சம்பவம் நடக்க வாய்ப்பு இல்லை. எனவே காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்துகிறோம்’ என தெரிவித்தார்.

0 கருத்துகள்: