தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

22.6.11

திஹார் சிறையில் தனி அறைக்கு மாற்றப்பட்டார் கனிமொழி


பாதுகாப்பு காரணங்களுக்காக திமுக ராஜ்யசபா எம்.பியும், திமுக தலைவர் கருணாநிதியின் மகளுமான கனிமொழி திஹார் சிறையில் தனி அறைக்கு மாற்றப்பட்டுள்லார். அவருக்குப் பாதுகாப்பும் தரப்பட்டுள்ளது.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிக்கி கைதாகியுள்ள கனிமொழி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மே 20ம் தேதி அவர் கைது செய்யப்பட்டார். மகளிர் சிறையான சிறை எண் 6ல் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.
 அவரது ஜாமீன் மனுக்களை

எகிப்து முன்னாள் அதிபர் முபாரக்கிற்கு புற்றுநோய் வழக்கறிஞர் அறிவிப்பு


எகிப்து முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக் வயிற்றுப் புற்று நோயால் அவதிப்படுவதாக அவரது வழக்கறிஞர் பரித் எல் தீப் தெரிவித்துள்ளார்.
ஹோஸ்னி முபாரக்(83) எகிப்து அதிபராக இருக்கையில் அவருக்கு எதிராக கடந்த பிப்ரவரி மாதம் மக்கள் புரட்சி வெடித்தது. அவரும் தன்னாள் இயன்ற வரை மக்களை அடக்கி ஒடுக்க முயன்றார். இறுதியில் மக்கள் சக்தி வென்று அவர் அதிபர் பதவியில் இருந்து விலகினார். இந்த போராட்டதின்போது 840 பேரை ராணுவத்தினர் கொன்றனர்.
பதவியில் இருந்து விலகிய பிறகு முபாரக்,

பெண் என்ற அடிப்படையில் கனிமொழி ஜாமீன் மனு தாக்கல் செய்யலாம்-உச்சநீதிமன்றம்


பெண் என்ற கருணை அடிப்படையில் கனிமொழி மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. எனினும், முன்னதாக கனிமொழியின் ஜாமீன் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கனிமொழியின் ஜாமீன் மனு, உச்சநீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. முன்னதாக,

பாகிஸ்தானை சேர்ந்தவரை விடுதலை செய்ய மன்மோகன் சிதம்பரத்துக்கு கடிதம்


கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள பாகிஸ்தானைச் சேர்ந்த கலீல் சிஷ்டி என்ற 80 வயது முதியவரை விடுதலை செய்வது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங், மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். இதனால் கலீல் சிஷ்டி விரைவில் விடுதலை செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தானைச் சேர்ந்தவர் கலீல்

ரஜீவ் படுகொலை அதிரும் உண்மைகள் மின்னஞ்சல் செய்தி


இன்று மின்னஞ்சலில் பரபரப்பாக அனுப்பப்பட்டுக் கொண்டிருக்கும் செய்தி ரஜீவ் படுகொலை அதிரும் உண்மைகள் என்ற செய்தியாகும். இந்த மின்னஞ்சல் அப்படியே இங்கே தரப்படுகிறது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை நிகழ்ந்து 20 வருடங்கள் ஆகிவிட்டன. படுகொலை தொடர்பாக விடுதலைப்புலிகளை குற்றவாளிகளாக கைது செய்து அவர்கள் தண்டனை அனுபவித்து வருகிறார்கள். ஆனால், அதில் இன்னும் மர்மங்கள் தீராமல் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன.
உண்மையில் அந்தக் கொடூரம் யாரால் நடத்தப்பட்டது? என்பது பற்றி இன்றுவரை தெளிவான பதில் இல்லை.

குரங்கை விண்வெளிக்கு அனுப்பும் ஈரான்


ராசாத்-1 என்ற செயற்கைகோளை ஈரான் தயாரித்துள்ளது. இதை மலேக் ஆங்தார் பல்கலைக்கழகம் வடிவமைத்துள்ளது. இந்த செயற்கைகோள் கவோஸ்கர்-5 என்ற ராக்கெட் மூலம் வருகிற ஜூலை 23-ந்தேதிக்கும் ஆகஸ்டு 23-ந்தேதிக்கும் இடையே விண்வெளியில் செலுத்தப்பட உள்ளது.
இந்த செயற்கைகோளை கடந்த பிப்ரவரி மாதம் ஈரான் அதிபர் மகமூத்

தொடர் குண்டுவெடிப்பு பயங்கரவாதிகள் மீது குற்றப்பத்திரிக்கை!


சம்ஜெளதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்கில் ஹிந்துத்துவா பயங்கரவாத சாமியார் அசீமானந்த் உள்ளிட்ட ஐந்து பேர் மீது தேசிய புலணாய்வு நிறுவனம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

2007ஆம் ஆண்டு இந்தியா VS பாகிஸ்தான் இடையேயான சம்ஜெளதா எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டுவெடித்தது. இதில் பாகிஸ்தானியர்கள் உள்ளிட்ட 68 பேர் உயிரிழந்தனர்.

சென்னை வர்த்தக கண்காட்சியில் இலங்கை பொருட்களை வைக்கக் கூடாது: சீமான்


சென்னை வர்த்தக கண்காட்சியில் இலங்கை பொருட்களை வைக்கக் கூடாது. மீறி வைத்தால் போராட்டம் நடத்தப்படும் என்று சீமான் எச்சரித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைவர் செந்தமிழன் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
சென்னை வர்த்தக மையத்தில்

ஊழல் வழக்கு – துனிசியா முன்னாள் அதிபருக்கு 35 ஆண்டு சிறை


துனிசியா முன்னாள் அதிபர் அல்-அபிடின் பென் அலிக்கும் அவரது மனைவிக்கும், ஊழல் வழக்கில் 35 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
துனிசியாவின் முன்னாள் அதிபர் ஷின் அல்-அபிடின் பென் அலி. இவரது ஆட்சியில் லஞ்ச ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
இதை தொடர்ந்து அவருக்கு

21.6.11

தலிபான்களுடன் பேச்சுவார்த்தை - அமெரிக்காவும் உறுதி செய்தது


ஆப்கானிஸ்தானில் போரை முடிவுக்குக் கொண்டுவர தலிபான் தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டு இருப்பதாக அமெரிக்கா முதல்முறையாக ஒப்புக்கொண்டுள்ளது. தலிபான்களுடன் பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்ய விரும்பும் அமெரிக்கா, அல்-கொய்தா இயக்கத்தை முழுதும் அழிக்க நினைக்கிறது. புதிதாக அல்-கொய்தாவின் தலைவராகப் பதவி ஏற்றுள்ள அய்மன் அல்-ஜவாஹிரியை கொல்வோம் என்றும் சபதம் செய்துள்ளது அமெரிக்கா.

சென்னையில் இன்று முதல் 4 மணி நேரம் மின்தடை

சென்னை, ஜூன். 21-  சென்னையில் இன்று முதல் சுழற்சி முறையில் 4 மணி நேரம் மின்தடை செய்யப்படுகிறது.
சென்னையில் தினமும் 1 மணி நேரம் மின் தடையும் மற்ற மாவட்டங்களில் 3 மணி நேரம் மின்தடையும், தற்போது அமலில் உள்ளது. முதல்-அமைச்சர் ஜெயலலிதா பதவிக்கு வந்ததும் மின் தடையை நீக்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்படும் என்று அறிவித்தார். இதையொட்டி பழுதடைந்த துணை மின்நிலையங்கள் சரி செய்யப்பட்டு வருகிறது. உயர்மின் அழுத்த

பாபா ராம்தேவ் அறகட்டளைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீசு


டெல்லியில் உண்ணாவிரதம் இருந்த ராம்தேவின் ஆதரவாளர்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதல் குறித்து விளக்கம் அளிக்க ராம்தேவின் அறக்கட்டளைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீசு அனுப்பியுள்ளது.
ஊழல் மற்றும் கறுப்பு பணத்துக்கு எதிராக கடந்த மாதம் 4-ந்தேதி யோகா குரு பாபா ராம்தேவ் டெல்லி ராம்லீலா மைதானத்தில் தனது ஆதரவாளர்களுடன்

கனிமொழிக்கு மீண்டும் பிணை மறுப்பு: உச்ச நீதிமன்றம் அதிரடி!


2G ஊழல் வழக்கில் கலைஞர் தொலைக் காட்சிக்கு ரூ 214 கோடி கைமாறிய விவகாரத்தில் கூட்டுச் சதி செய்ததாக சி பி ஐ யால் குற்றம் சாட்டப் பட்டு திகார் சிறையில் அடைக்க பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழியின் ஜாமீன் மனுவை உச்ச நீதிமன்றமும் தள்ளுபடி செய்தது.

சம்ஜெளதா குண்டுவெடிப்பு: அசீமானந்த் உள்ளிட்ட ஐவர் மீது குற்றப்பத்திரிகை!


கடந்த நான்கரை ஆண்டு கால விசாரணைக்குப் பின், சம்ஜெளதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்கில் இந்துத்துவா சாமியாரான அசீமானந்த் உள்ளிட்ட ஐந்து பேர் மீது தேசிய புலணாய்வு நிறுவனம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

2007ஆம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் இடையேயான சம்ஜெளதா எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டுவெடித்தது. இதில் பாகிஸ்தானியர்கள் உள்ளிட்ட 68 பேர் உயிரிழந்தனர்.

சிபிஐ மற்றும் என்ஐஏ என

இந்தியாவில் விரைவில் “புல்லட்” ரெயில் அறிமுகம்!!!

புதுடெல்லி, ஜூன்.21-பிரான்ஸ் நாட்டில் உள்ளது போன்று புல்லட் ரெயில் எனப்படும் அதிவிரைவு ரெயில் சேவையை தொடங்க இந்திய ரெயில்வே துறை திட்டமிட்டுள்ளது.

இந்த ரெயில் மணிக்கு 300 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும்.  பிரான்ஸ் நாட்டில் புல்லட் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அங்கு மணிக்கு 280 to 300 கிலோ மீட்டர் வேகத்தில் புல்லட் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. 

20.6.11

ஆரியப் பேய்களை அடித்து விரட்டுவோம் வாரீர் !


மதுரை: ""திராவிட இனம் என்பதே இல்லை. திராவிடம் என்பது ஒரு பகுதியின் பெயர்,'' என, மதுரையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணியசாமி குறிப்பிட்டார்.

மதுரைக் கல்லூரியில் ஆங்கில துறை பேராசிரியர் சுப்ரமோனி எழுதிய "பரமஹம்சா-த வேதாந்திக் டேல்' நூல் வெளியீட்டு விழா நடந்தது. நூலை வெளியீட்டு சுப்ரமணியசாமி பேசியதாவது: அமெரிக்காவில் பொருளாதார மேம்பாடுக்கு உதவும் இந்துத்துவா கொள்கை என்ற தலைப்பில் என்னை பேச அழைத்தனர்.

அந்தளவுக்கு அமெரிக்காவில் இந்துத்துவா, சனாதன தர்மத்தை கை பிடிப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். இந்தியா ஆசிரமங்களில் அமெரிக்க சாதுக்கள் அதிகளவில் உள்ளனர். திராவிட இனம் என கருணாநிதி போன்றோர் பேசுகின்றனர்.

இஸ்ரேலை யூததேசமாக ஏற்பதே ஒரே தீர்வு- நெத்தன்யாஹூ


இஸ்ரேலை யூதர்களின் தேசம் என்று பலஸ்தீனர்கள் ஏற்றுக்கொள்ளாத வரை அரபு-இஸ்ரேலிய முரண்பாடு இருந்துகொண்டே இருக்கும் என இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹூ வலியுறுத்தியுள்ளார்.
"ஒருசில கிலோ மீற்றர் வரையுள்ள நிலப்பகுதிக்காக இஸ்ரேல் சண்டைபிடிக்கப் போவதில்லை" என்றும், "இஸ்ரேல் யூதர்களின் தனிநாடு என்பதை பலஸ்தீனர்கள் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே இங்கு மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றது" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


"மேற்குக் கரையில் இருக்கும்

நீரழிவு சர்க்கரை(Sugar) நோய்க்கு ஒரு எளிய மருந்து


சர்க்கரை நோய்க்கு ஒரு எளிமையான சிகிட்சை.முயற்சித்துப் பார்க்கலாமே!
மருந்து :

  • வெந்தையம் – 50 கி
  • கருஞ்சீரகம் – 25 கி
  • ஓமம் – 25 கி
  • சீரகம் – 25 கி

இவற்றை ஒன்றாக சேர்த்து வறுத்து பொடி செய்து கொள்ளவும்.
(வறுத்தபின் மிக்‌ஷியில் போட்டு பொடி செய்து கொள்ளவும்).
தினமும் காலை சிறிய ஸ்பூன் -ல் 1 ஸ்பூன் அளவு எடுத்து
வாயில் போடவும். கசப்பாக இருக்கும். வெறும் வயிற்றில் சாப்பிட்டால்

தயாநிதி மாறனை சிபிஐ விசாரிக்க பிரதமர் ஒப்புதல்!


புது தில்லி: 2-ஜி அலைக்கற்றை விவகாரத்தில் சிக்கியுள்ள மத்திய ஜவுளித் துறை அமைச்சர் தயாநிதி மாறனிடம் சி.பி.ஐ. விசாரணை செய்ய பிரதமர் அனுமதி அளித்துள்ளதாக பிரதமர் அலுவலக வட்டாரங்களில் இருந்து தெரிய வருகிறது.

இதைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் பதவியிலிருந்து அடுத்த வாரம் அவர் ராஜிநாமா செய்வார் என தில்லி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

2-ஜி விவகாரத்தில் ஏர்செல்

தண்ணீரைப் பீய்ச்சி அடிக்கும் புதிய நட்சத்திரம்!

லண்டன், ஜூன்.-  புதிதாகத் தோன்றிய ஒரு நட்சத்திரத்திலிருந்து மாபெரும் அளவில் தண்ணீ­ர் பீய்ச்சி அடித்துக் கொண்டிருப்பதை ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் கண்டுபிடித்துள்ளது.

பூமியிலிருந்து 750 ஒளி வருடத்துக்கு அப்பால் உள்ளது இந்த நட்சத்திரம். இதன் வயது 100,000 ஆண்டுகள் தான். அதாவது சூரியனை ஒத்துள்ள இந்த நட்சத்திரம் இன்னும்