புதுதில்லி, நவ.6 பக்ரீத் பண்டிகையையொட்டி முஸ்லிம் மக்களுக்கு, குடியரசுத் தலைவர் பிரதீபாதேவிசிங் பாட்டீல் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.
அவர் தனது வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது;
ஈகை திருநாளான இன்று சமூக நல்லிணக்கத்தையும், ஒற்றுமையையும் நினைவு கூறுகிறேன். முஸ்லிம் சகோதரர்களுக்கும், சகோதரிகளுக்கும் எனது நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்திய மக்களின் வளமான வாழ்வுக்கும்,
சமுதாய முன்னேற்றத்துக்கும், இந்த நாள் வழிகாட்டும் நாளாக அமையட்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக