தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

11.4.11

அமெரிக்காவிற்கு எதிராக மீண்டு ஆயுதப் போராட்டம் – முக்ததா அல் ஸத்ர்


பாக்தாத்:ஈராக்கிலிருந்து அமெரிக்க ராணுவம் பின்வாங்கும் வரை அந்நாட்டு படையினருக்கு எதிராக ஆயுத போராட்டம் தொடரும். இதற்காக மெஹ்தி ராணுவத்தை புனரமைப்போம் என அமெரிக்க எதிர்ப்பு போராட்ட போராளியும், ஷியா அறிஞருமான முக்ததா அல் ஸத்ர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முன்னாள் அதிபர் சதாம் ஹுசைனின் ஆட்சி அகற்றப்பட்டு எட்டு ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி நடந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு உரை நிகழ்த்தினார் ஸத்ர்.
ஈராக்கில் அமெரிக்க அந்நிய படையினருக்கு மட்டுமல்லாமல், அவர்களுடன் ஒப்பந்த வேலைகளில் ஈடுபட்டிருக்கும் அனைத்து தொழிலாளர்களுக்கும் ஸத்ர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

யெமன்:அல்ஜஸீராவின் அலுவகம் மூடல்


ஸன்ஆ:மக்கள் எழுச்சிப்போராட்டம் வலுவடைந்துள்ள யெமன் நாட்டில் அல்ஜஸீரா தொலைக்காட்சியின் அலுவலகத்தை பாதுகாப்பு அதிகாரிகள் இழுத்து மூடினர். தலைநகரான ஸன்ஆவிலுள்ள முக்கிய அலுவலகம் தான் மூடப்பட்டுள்ளது.யெமன் நாட்டில் செயல்படும் பெர்மிட்டும் அல்ஜஸிராவுக்கு ரத்துச்செய்ததாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சர்வாதிகாரி அலி அப்துல்லாஹ்

'நரிக்கு நாட்டாண்மை கிடைத்தால், கிடைக்கு 2 ஆடுகள் கேட்கும்': தேர்தல் ஆணையத்தை கண்டிக்கும் கலைஞர்


தேர்தல் ஆணையம் அளவு மீறி சென்றுகொண்டிருப்பதாகவும், இந்த நிலைமையை மத்திய அரசு மாற்ற வேண்டுமெனவும், தமிழக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
கடலூர் மாவட்ட திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மஞ்சக்குப்பம் மைதானத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றிய போது இவ்வாறு கருணாநிதி கூறினார்.

லியோனிக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ்


தி.மு.க.,விற்காக தேர்தல் பிரச்சாரம் செய்த ஆசிரியர் திண்டுக்கல் லியோனிக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.திண்டுக்கல் செயின்ட் மேரீஸ் மேல்நிலைபள்ளி ஆசிரியர் லியோனி. பட்டிமன்ற பேச்சாளர். கடந்த சில மாதங்களாக சம்பளம் இல்லாத விடுமுறையில் உள்ளார்.பிரசாரம்: சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வின் நட்சத்திர பேச்சாளராக அறிவிக்கப்பட்ட இவர் பல ஊர்களில் அக்கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். தேர்தல் கமிஷனுக்கு இதுகுறித்து புகார் சென்றது.
நோட்டீஸ்: தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி,

எந்த அடிப்படை வசதியும் இல்லாத ஊர் ரிஷிவந்தியம்


எந்த அடிப்படை வசதியும் இல்லாத ஊர் என்பதால்தான் ரிஷிவந்தியத்தை தேர்வு செய்து நிற்கிறேன், பணத்துக்கு ஆசைப்பட்டிருந்தால் திமுகவிடமே அதைப் பெற்றிருப்பேனே, என்றார் விஜயகாந்த்.
அதிமுக கூட்டணியில் இணைந்து ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிடுகிறார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். இவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் சிவராஜ் போட்டியிடுகிறார்.
தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் செய்து கூட்டணி கட்சியினருக்கு

27 ஆண்டுகளாக பாகிஸ்தான் சிறையில் இருந்த இந்தியர் விடுதலை


லாகூர், ஏப். 8- பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தவர் கோபால் தாஸ். இவர் பாகிஸ்தானில் இந்தியாவுக்காக உளவு பார்த்ததாக 1984-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். 3 ஆண்டு கால விசாரணைக்குப் பிறகு அவருக்கு 1987-ம் ஆண்டு கோர்ட்டு ஆயுள் தண்டனை விதித்தது. அவர் இந்த ஆண்டு இறுதியில் விடுதலை செய்யப்பட இருந்தார்.
இந்தநிலையில் இந்திய சுப்ரீம் கோர்ட்டின் 2 நீதிபதிகள் கொண்டு பெஞ்சு, தாசுக்கான தண்டனை காலத்தை குறைத்து மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டது. இதை ஏற்றுக்கொண்டு பாகிஸ்தான் ஜனாதிபதி சர்தாரி தாசின் தண்டனையை குறைத்தார். இதை தொடர்ந்து தாஸ் நேற்று விடுதலை செய்யப்பட்டார்.

கிளர்ச்சியாளர்களால் நிராகரிக்கப்பட்டதுருக்கி பிரதமர் எர்டோகனின் பேச்சு!


பெங்காசி, ஏப். 9- லிபியாவில் அதிபர் கடாபிக்கு எதிராக கடுமையான போராட்டம் நடைபெற்று வருகிறது. கிளர்ச்சியாளர்கள் மீது கடாபி ஆதரவு ராணுவம் தாக்குதல் நடத்துவதால் அமெரிக்கா உள்ளிட்ட கூட்டு படையினர் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், கடாபியுடன் கிளர்ச்சியாளர்கள் பேச்சு வார்த்தை நடத்த உதவுவதாகவும் அமைதிக்கான செயல் திட்டம் தன்னிடம் இருப்பதாகவும் துருக்கி பிரதமர் டய்யிப் எர்டோகன் தெரிவித்தார்.