தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

3.1.11

மலையாளிகளால் அரபுகளுக்கு ஆபத்து : துபாய் காவல் துறை தலைவர் அதிரடி பேட்டி


துபாய் : வளைகுடாவில் நாள் தோறும் வேலை வாய்ப்புக்காக வரும் வெளிநாட்டவர்களால் வளைகுடாவின் மண்ணின் மைந்தர்களான அரபு மக்கள் ஒதுக்கப்படும் அபாயம் உள்ளதாக சொல்லப்படுவதை தாம் ஆதரிப்பதாக துபாய் காவல் துறை தலைவர் தெரிவித்தார்.


வெளிநாட்டவர்களை கட்டுபடுத்த சட்டம் கொண்டு வரப்படவில்லையெனில் அரபு மக்கள் தங்கள் மண்ணில் சிறுபான்மையினராக வாழும் நிலை ஏற்படுவதை தவிர்க்க முடியாது என்று துபை காவல்துறை தலைவர் தஹி கல்பான் கத்தார் தொலைக்கட்சியில் பிரபலமான லகும் அல் கரார் (உங்கள் முடிவு என்ன?) எனும் நிகழ்ச்சியில் மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது கூறினார்.
“அதிகரித்து வரும் வெளிநாட்டவர்களால் வளைகுடாவின் அடையாளத்திற்கும் கலாச்சாரத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்றும் அப்படி ஏற்படாமல் தடுக்க அரசாங்கங்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்” எனும் தலைப்பில் தன் கருத்துகளை பதிவு செய்யுமாறு கேட்டு கொண்ட போது வளைகுடாவில் உள்ள அரசாங்கங்கள் வெளிநாட்டவர்களை கட்டுப்படுத்த துணிச்சலான முடிவுகளை மேற்கொள்ளாவிடில் அமெரிக்காவில் சிவப்பிந்தியர்கள் வெள்ளையர்களால் ஒடுக்கப்பட்டதை போல் அரபுகள் தங்கள் மண்ணில் ஒடுக்கப்பட்டு அடையாளம் தெரியாமல் போகும் அபாயம் உள்ளது என்று கூறினார்.
தஹி கல்ஹான் மேலும் கூறும் போது குறிப்பாக அரபுகள் மலபாரிகளையும் (மலையாளிகளை குறிக்க அரபுலகில் பயன்படுத்தப்படும் வார்த்தை) ஈரானிகளையும் உற்று நோக்க வேண்டும். அவர்கள் அரபு நாடுகளில் வந்து சிறு கடைகளை திறந்து காலப்போக்கில் அரபுகளை விட வசதியான மில்லியனர்களாக மாறிவிடுகிறார்கள் என்று சொன்னார். மேலும் தஹி கல்ஹான் கூறும் போது அடிப்படையில் அரபுகளுக்கு சொந்தமான இக்கடைகளை அரபுகளே நடத்தலாமே என்று கேள்வி எழுப்பியவர் ஆனால் அரபுகள் வேலை செய்ய விரும்பவில்லை என்றும் கூறினார்.
வளைகுடாவிற்கு வேலைக்கு வரும் ஒரு இந்திய டிரைவர் சிறிது காலத்திலேயே தன் சொந்தக்காரர் ஒருவரை வேலை இல்லையென்றாலும் வளைகுடாவிற்கு அழைத்து கொள்கிறார். பின் அவருக்காக எப்படியோ அலைந்து வேலை வாங்கி கொடுத்து விடுகிறார். அவர் இன்னொரு ஆளுக்கு என்று வரையறையின்றி தொடர்ந்து கொண்டே இருக்கிறது என்று கூறிய தஹி கல்ஹான் அமைச்சகங்கள் ஆட்சியாளர்களுக்கு இவ்வபாயங்களை எடுத்து கூறி வெளிநாட்டவர்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். இது போன்ற கருத்துக்கள் புதியது அல்ல என்றாலும் உயர் அரசு பொறுப்பில் இருப்பவர் இப்படி பேசியுள்ளது வளைகுடாவில் வாழும் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்.எஸ்.எஸ்ஸின் நிகழ்ச்சியில் கம்யூனிஸ்ட் அமைச்சர்

பெங்களூர்,ஜன.3:கேரள மாநிலத்தில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக பணியாற்றிவரும் பி.கே.ஸ்ரீமதி ஆர்.எஸ்.எஸ்ஸின் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்றது சர்ச்சையை கிளப்பியுள்ளது.ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் விஞ்ஞான் பாரதி கடந்த டிசம்பர் மாதம் பெங்களூரில் நடத்திய நான்காவது ஆயுர்வேத மாநாட்டின் ஒருபகுதியாக நடந்த கண்காட்சியை கர்நாடக மாநில பா.ஜ.க அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் எஸ்.எ.ராம்தாஸுடன் இணைந்து கம்யூனிஸ்ட் கட்சி அமைச்சரான ஸ்ரீமதி திறந்துவைத்தார்.

கர்நாடகா மாநில பா.ஜ.க முதல்வர் எடியூரப்பா மற்றும் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஆகியோரும் கம்யூனிஸ்ட் அமைச்சருடன் மேடையில் வீற்றிருந்தனர்.

இந்தியாவில் விஞ்ஞான, தொழில்நுட்ப வளர்ச்சி என்ற பெயரில் பயங்கரவாத இயக்கமான ஆர்.எஸ்.எஸ்ஸின் விஞ்ஞான் பாரதி அமைப்பு ஆரோக்கிய எக்ஸ்போ என்ற நிகழ்ச்சியை நடத்தியது.

கடந்த டிசம்பர் 9-ஆம் தேதி இந்நிகழ்ச்சி நடந்துள்ளது. ஆனால், இச்செய்தியை வெளியிட்டால் சர்ச்சையாகும் எனக்கருதி கேரள மாநிலங்கள் மூடி மறைத்துள்ளன.

ஏகற்கனவே ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கத்தின் பிராந்திய சங்கிக் நிகழ்ச்சியில் பங்கேற்ற கொல்லம் மேயரை கேரள மாநில கம்யூனிஸ்ட் கட்சி வெளியேற்றியிருந்தது.

இந்தியாவில் நடந்தேறிய பல்வேறு குண்டுவெடிப்புகள் மற்றும் நாசவேலைகளில் ஆர்.எஸ்.எஸ்ஸின் தேசிய தலைமையிலிருந்து அதன் தொண்டர்கள் வரை ஈடுபட்டதை புலனாய்வு ஏஜன்சிகள் கண்டறிந்துவரும் வேளையில் அவ்வமைப்பின் சார்பாக நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் ஒரு கம்யூனிஸ்ட் அமைச்சர் பங்கேற்றது அக்கட்சிக்குள் சர்ச்சையை கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத அமைப்பின் மாணவர் பிரிவான ஏ.பி.வி.பியின் அகில இந்திய நிகழ்ச்சி பெங்களூரில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆஸ்கர் விருதுப் பெற்றவரும், இடதுசாரி சிந்தனையுடையவருமான ரசூல் பூக்குட்டி பங்கேற்றதும் சர்ச்சையை கிளப்பியிருந்தது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

இந்தியா ஃபெடர்னிடி ஃபாரம் நடத்திய "நீதியைத் தேடும் பாப்ரி மஸ்ஜித்" கலந்தாய்வு அமர்வு

ஜுபைல்(சவூதிஅரேபியா),ஜன.3: வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் நலனுக்காக சவூதி அரேபியாவில் செயல்பட்டுவரும் அமைப்பு இந்தியா ஃபெடர்னிடி ஃபாரம்(IIF). இவ்வமைப்பின் தமிழ் பிரிவு சார்பாக ஜுபைல் நகரில் "நீதியைத்தேடும் பாப்ரி மஸ்ஜித்" என்ற தலைப்பில் கலந்தாய்வு அமர்வு நடந்தேறியது.

ஜுபைல் இண்டர்நேசனல் ரெஸ்ட்டாரெண்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு ஜுபைல் ஏரியா தலைவர் அஹ்மத் சிராஜ் தலைமை வகித்தார். ஹஸன் முஹம்மது IIF ஆற்றிவரும் பணிகளைக் குறித்து உரை நிகழ்த்தினார். பொறியாளர் நாகூர்மீரான் சிறப்புரையாற்றினார்.

அவர் தனது உரையில் குறிப்பிட்டதாவது: "நான்கு நூற்றாண்டுகளாக இந்திய முஸ்லிம்கள் தொழுகை நடத்திய பாப்ரி மஸ்ஜித் முஸ்லிம்களுக்கே சொந்தமானதாகும். இந்தியாவில் பெரும்பாலான அரசியல் கட்சிகளும், ஊடகங்களும், நீதிபீடங்களும் சங்க்பரிவார்களுக்கு அனுகூலமான நிலைப்பாட்டை மேற்கொண்டுள்ளனர்.

பாப்ரி மஸ்ஜித் ஒரு இந்து-முஸ்லிம் பிரச்சனையல்ல. இந்தியாவின் மானப் பிரச்சனையாகும். பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட அதே இடத்தில் மீண்டும் கட்டப்பட்டால் மட்டுமே இந்நாட்டை ஆள்பவர்கள் தேசத்தோடும், முஸ்லிம்களோடும் நீதியோடு நடந்தார்கள் என்று கூறவியலும். அதற்காக தேசத்தின் அனைத்து ஜனநாயக அமைப்புகளும், முஸ்லிம்களும் களமிறங்க வேண்டும்." இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியின் இறுதியாக நன்றியுரையை பிலால் முஹம்மது தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் சவூதி வாழ் தமிழ் மக்கள் நூற்றுக்கும் அதிகமானோர் கலந்துக்கொண்டனர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

ஆஸி. கிரிக்கெட் அணியில் முதல் முஸ்லிம் வீரர் உஸ்மான் காஜா

சிட்னி,ஜன.3:ஆஸ்திரேலிய கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு வீரர் இடம் பிடித்துள்ளார். இவர் பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்தவர். இஸ்லாமாபாத்தில் பிறந்தவர்.24 வயதேயாகும் அந்த இளம் வீரரின் பெயர் உஸ்மான் காஜா. இவர் இஸ்லாமாபாத்தில் பிறந்தவர். இவரது குடும்பம் ஆஸ்திரேலியாவில் செட்டிலாகி அந்த நாட்டு குடியுரிமைப் பெற்றதாகும்.

வளரும் கிரிக்கெட் வீரராக இருந்து வந்த காஜா ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடிக்கும் வேகத்துடன் தீவிரமாக கிரிக்கெட் ஆடி வந்தார். தற்போது அவருக்கு ஆஸ்திரேலிய அணியில் இடம் கிடைத்துள்ளது, அதுவும் டெஸ்ட் அணியில். அதை விட முக்கியமாக இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் பெருமையைப் பெற்றுள்ளார் காஜா.

இரு நாடுகளுக்கும் இடையிலான 5வது டெஸ்ட்போட்டி இன்று சிட்னியில் தொடங்கியது. இதில் காஜாவும் இடம் பெற்றுள்ளார்.

இங்கிலாந்து பந்து வீச்சு குறித்து சற்றும் பயமில்லாமல் மிகவும் தைரியமாக ஆடி வருகிறார் காஜா. தேநீர் இடைவேளையின் போது அவர் ஆட்டமிழக்காமல் 24 ரன்கள் எடுத்திருந்தார்

இணையத் தமிழை சமஸ்கிருதமயமாக்க முயற்சி

ஆரிய நரிகள் மீண்டும் வாலாட்டம் கணினித்துறை, இணையம் இவற்றில் இந்திய மொழிகளிலேயே அதிக அளவில் வளர்ச்சி கண்டு வருவது தமிழ்தான். அதிலும் ஒருங்குறி எனப்படும் யூனிகோட் முறையில் தமிழ் எழுத்துகள் வந்தபிறகு எண்ணற்ற இணையதளங்கள் பழந்தமிழ் இலக்கியங்களை யும், புதிய படைப்புகளையும் கொண்டும் அறிவியல் கருத்துகளை எளிய தமிழில் தந்து வருகின்றன. இதை எவ்விதத் தடங்கலுமின்றி, உலகின் எந்த மூலையிலிருந்தும் எழுத்துரு (குடிவே) தடையின்றி படிக்கலாம்; எழுதலாம். கூகிள், விண்டோஸ் உள்ளிட்ட அனைத்து நிறுவனங் களும் யூனிகோட் தமிழை அங்கீகரித்து தங்களது மென்பொருள்களிலும் இவற்றை பயன்படுத்திவருகின்றனர். ஏற்கெனவே தமிழுக்கென உலக அளவி லான யூனிகோட் ஒதுக்கீட்டில் 128 இடங்கள் மட்டுமே கிடைத்திருந்தன. இதை அதிகப் படுத்தி தமிழ் எழுத்துகள் அனைத்துக்கும் இடம் கிடைத்தால் தான் எளிமையாகவும், வேகமாகவும் பணிகள் நடைபெறும் . இதற்காக யூனிகோட் சேர்த்தியத்திடம் (Unicode Consortium) கணினித் தமிழ் ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஏற்கெனவே தமிழ் எழுத்துகளுடன், வழக்கத்தில் இருக்கும் கிரந்த எழுத்துகளான ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ ஆகியன சேர்க்கப்பட்டுள்ளன. தமிழ் அறிஞர்களின் வேண்டுகோளுக்கேற்ப தமிழக அரசும் யூனிகோடு முறையை அங்கிகரித்துள்ளது. இந்நிலையில் தமிழ் எழுத்துகளுடன் புதிதாக சில கிரந்த எழுத்துகளையும் சேர்க்கும் முயற்சியை தமிழ் அறிஞர்களுக்கும், தமிழக அரசுக்கும் தெரியாமல் பார்ப்பனக் கும்பல் மேற்கொண்டுள்ளது. இவர்கள் சேர்க்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள 26 கிரந்த எழுத்துகளை இதுவரை நாம் பார்த்திருக்க வாய்ப்பேயில்லை. தமிழுக்கு சற்றும் தொடர்-பில்லாத, தமிழ் எழுத்துகளுக்கும், தமிழ் எழுத்து முறைக்கும், இலக்கணத்திற்கும் எந்தத் தொடர்புமில்லாத சமஸ்கிருத (கிரந்த) எழுத்துகளைத் தமிழில் சேர்க்க வேண்டும் என்று கோரியிருப்பவர் யார் தெரியுமா? ஸ்ரீ ரமண சர்மா என்ற பச்சைப் பார்ப்பனர். அதற்கு அவர் எடுத்துக்காட்டியிருக்கும் ஆதாரம் எது தெரியுமா? காமகோடி கோஷாஸ்தனத்திலிருந்து சில வரிகள் மற்றும் டி.எஸ். நாராயண சாஸ்திரியின் போஜ சரிதம்'. இப்போது புரிந்திருக்குமே இந்தச் சூழ்ச்சி வலையின் சூத்திரதாரிகள் யாரென்று! சந்தேகமேயில்லாமல் சங்கரமடத்தின் கைகள் தான் இதன் பின்னால் ஒளிந்திருக்கின்றன. காமகோடி பீடத்தைச் சேர்ந்த ஆயுர்வேதக் கல்லூரியும், சமஸ்கிருதக் கல்லூரியும் ஸ்ரீரமண சர்மாவின் பின்னணியில் இருந்து கிரந்த எழுத் துகளை தமிழ் என்று இணைக்க முயற்சிக் கின்றன. தமிழ் மொழிக்குடும்பம் வேறு! ஆரிய சமஸ் கிருத மொழிக்குடும்பம் வேறு! இரண்டின் எழுத்துகளும், அதற்கான முறைகளும், ஒலிப்புகளும் வேறானவை. ஆனால் இப்போது எடுக்கப்பட்டிருக்கும் இந்த முயற்சி வெற்றி பெற்றால் இனி வரும் காலத்தில் தமிழுடன் இந்த 26 கிரந்த எழுத்துகளும் இணைந்தே இருக்கும். வளர்ந்துவரும் இணையத் தமிழ் தான் அடுத்துவரும் அத்தனை தலைமுறைக்கும் தமிழின் அடிப்படையாக இருக்கப்போகிறது.
"இது நீண்டகாலச் சதி. இந்த யூனிகோட் சேர்த்தியம் என்பது பன்னாட்டு நிறுவனம். அதன் சட்ட திட்டங்கள் ஓட்டை உடைசல் களைக் கொண்டன. யார் வேண்டுமானாலும் எந்த மொழியிலும் இன்னின்ன மாற்றங்கள் வேண்டும் என்று சொல்லி எழுதிக் கொடுக்கலாம். அதற்கு உள்ளேயும் தொடர்பிலேயும் சற்று வேண்டியவர்கள் இருந்தால் ஒரு மொழிக்கு என்ன கேடுகளை வேண்டுமானா லும் செய்யலாம். இதைப் பயன்படுத்தி ஆரிய நரிகள் சமஸ்கிருத எழுத்துகளை உள்நுழைக்கப் பார்க்கின்றனர். இதற்கு தமிழ்ப்பற்றாளர்களும், மிக முக்கியமாக தமிழக அரசும் கடுமையான கண்டனத்தையும், மறுப்பையும் உடனடியாகப் பதிவு செய்யவேண்டும். அக்டோபர் 25-ஆம் தேதி யூனிகோடு சேர்த்தியம் சர்மாவின் முன்வைப்பைப் பரிசீலனைக்கு எடுக்கிறது, கடந்த இரண்டுநாட்களில் உலகெங்கும் உள்ள தமிழர்கள் இது குறித்து யூனிகோடு நிறுவனத் திற்கு தொடர்ந்து எழுதி முடிவு எடுப்பதை சில நாட்கள் தள்ளிப் போடும்படி செய்துள்ளனர். அதற்குள்ளாக போர்க்கால வேகத்தோடு இதனைக் கவனத்தில் எடுத்து தமிழக அரசு செயல்பட வேண்டும்" என்கிறார் தமிழ் கணினி வல்லுநரும், இப்பிரச்சினையை உலகறியத் தந்துள்ளவருமான நாக.இளங்கோவன். இது குறித்து உத்தமம் (INFITT) அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், இப்பிரச்சினை குறித்து அறிந்து செயல்பட்டுவருபவருமான நா.கணேசன் அவர்களின் தொடர்பு கொண்ட-போது, "இச்சிக்கலை உத்தமம் சார்பில் எடுத்துவைத்து எங்களது பரிந்துரையையும் அனுப்பியுள்ளோம்" என்றார். தமிழ்க் கணினித்-துறையில் முக்கியமானவரும், கணித்தமிழ் சங்கத்தில் பங்காற்றுபவருமான மா.ஆண்டோ-பீட்டர் அவர்களிடம் கேட்டபோது, "இது கண்டிப்பாக கண்டனத்திற்குரியது." என்று கருத்து தெரிவித்தார். மேலும், சங்கரமடத்தின் இந்தச் சதிக்கு எதிராக தமிழ்க்கணினித் துறை இளைஞர்களும், தமிழார்வலர்களும் கடும் போராட்டங்களில் ஈடுபட எண்ணியிருப்பதாக வும் தகவல்கள் வெளிவந்த வண்ணமிருக்கின்றன. இப்படி தமிழ் அறிஞர்களின் கடும் எதிர்ப்புக்கிடையில் காஞ்சி காம'கேடி'களும், பார்ப்பனர்களும் தமிழைச் சிதைக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியிருப்பது கவனத்திற்குரியதாகும். இது குறித்து எச்சரிக்கையுடன் இருந்து தமிழைக் காக்க வேண்டியது மிக அவசரமாகும். தமிழை அழிப்பதில் ஆரியம் எவ்வளவு முனைப்பு காட்டுகிறது என்பதை தமிழர்கள் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்திக் கொள்வது நல்லது. இந்தப் பிரச்சினையை திராவிடர் கழகம் கவனத்துடன் நோக்கி வருகிறது. வடமொழித் திணிப்பிற்கெதிரான மொழிப்போராட்டத்தின் அடுத்த கட்டமாக அது அமையலாம்.
- ஜூனியர் சர்ச்லைட
நன்றி: உண்மை ஆன்லைன் .காம்