தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

19.5.11

தீவிரவாதிகளுக்கு இங்கு இடமில்லை-தப்லீக் ஜமாத் விக்கிலீக்சை தாக்கு

புதுதில்லி:அல் கொய்தாவுடன் தப்லீக் ஜமாத்திற்கு தொடர்பு உள்ளது என்று விக்கிலீக்ஸ் செய்தி வெளியிட்டதை குறித்த பிரச்சனைக்கு பலதரப்பட்ட முஸ்லிம் அமைப்புகளிடம் இருந்து கிடைத்த ஆதரவை தொடர்ந்து தப்லிக் ஜமாத் விக்கிலீக்சை கடுமையாக தாக்கி அறிக்கை வெளியிட்டுள்ளது.



விக்கிலீக்சின் கூற்றை நிராகரித்த தப்லீக் ஜமாத் தங்களின் அமைப்பு தீவிரவாதிகளின் உறைவிடம் அல்ல என தெரிவித்துள்ளது. விக்கிலீக்ஸ் செய்தி வெளியிட்ட பின் முதன் முறையாக தப்லீக் ஜமாத்தின் சார்பாக மறுப்பு தெரிவித்து மீடியாவிற்கு பேட்டியளித்த மௌலானா யூசுப் சுலேறி Twocircles.net என்ற இணையதள பத்திரிக்கையிடம் தப்லீக் ஜமாத் அல் கொய்தாவுடனோ  அல்லது வன்முறையில் ஈடுபடும் வேறு எந்த அமைப்புடனோ தொடர்பு வைத்து கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளார்.

காஞ்சி சங்கராச்சாரியாரின் கபடவேடம்:பாப்ரி மஸ்ஜித் நில விவகாரத்தில் தீர்வு காணப்போகிறாராம்


shankaracharya

சேலம்:சேலத்தில் உள்ள சங்கரமடத்திற்கு பக்தர்களுக்கு ஆசி(?) வழங்கவந்த சங்கரராமன் கொலை புகழ் சங்கராச்சாரி, பாப்ரி மஸ்ஜித் பிரச்சனைக்கு நீதிமன்றம் மூலம் தீர்வு காண முடியாது என நிருபர்களிடம் பேட்டியளித்துள்ளார். சங்கரராமன் கொலை வழக்கில் சிக்கியதால் வண்டவாளங்கள் எல்லாம் வெளியாகி சீரழிந்தவர் தாம் சங்கராச்சாரி.
ஆன்மீகப்போர்வையில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளுக்கு

அசுர வேகத்தில் அணுஉலை கட்டி வரும் பாகிஸ்தான்


இஸ்லாமாபாத், பாகிஸ்தான் அசுர வேகத்தில் அணுஉலை கட்டுமானப் பணிகளை முடுக்கி விட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாகிஸ்தானின் குஷாப் மாகாணத்தில் அணுஉலைகள் இருக்கின்றன. ஏற்கனவே 3 அணுஉலைகள் அமைத்துள்ள நிலையில், 4வது அணுஉலை கட்டுமானப் பணிகள் அசுர வேகத்தில் நடந்து வருகிறது. பாகிஸ்தான் அணு ஆயுதங்கள் தயாரிப்பதை தடுத்த நிறுத்த வேண்டும் என்றும், அணு உலைகள்

உலகின் உயரமான கட்டிடத்தில் இருந்து குதித்து இந்தியர் தற்கொலை



துபாய், மே.12- ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் துபாயில் தான் உலகிலேயே உயரமான கட்டிடம் புர்ஜ் கலீபா இருக்கிறது. இந்த கட்டிடத்தில் 147 தளங்கள் உள்ளன. 147-வது மாடியில் இருந்து குதித்து இந்தியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
அவர் புர்ஜ் கலீபா கட்டிடத்தில் செயல்பட்டு வரும் ஒரு அலுவலகத்தில் வேலை செய்து வந்தார். அவர் வருடா வருடம் கோடை காலத்தில் விடுமுறை எடுத்துக்கொண்டு இந்தியாவுக்கு திரும்புவது வழக்கம். இந்த ஆண்டு அவருக்கு விடுமுறை தர அலுவலகம் மறுத்து விட்டது. இதனால் மனம் உடைந்த அவர் இந்த முடிவை தேடிக்கொண்டார்.
இவர் 147-வது தளத்தில் இருந்து குதித்தார். 108-வது மாடியில் அவர் உடல் பிணமாக கண்டு எடுக்கப்பட்டது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்தவரின் பெயர் விவரங்களை தெரிவிக்க அதிகாரிகள் மறுத்து விட்டனர்