இஸ்லாமாபாத், பாகிஸ்தான் அசுர வேகத்தில் அணுஉலை கட்டுமானப் பணிகளை முடுக்கி விட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாகிஸ்தானின் குஷாப் மாகாணத்தில் அணுஉலைகள் இருக்கின்றன. ஏற்கனவே 3 அணுஉலைகள் அமைத்துள்ள நிலையில், 4வது அணுஉலை கட்டுமானப் பணிகள் அசுர வேகத்தில் நடந்து வருகிறது. பாகிஸ்தான் அணு ஆயுதங்கள் தயாரிப்பதை தடுத்த நிறுத்த வேண்டும் என்றும், அணு உலைகள்
அமைப்பதற்கு கெடுபிடிகளை விதிக்க வேண்டும் என்றும் சர்வதேச சமூகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 2013ம் ஆண்டு 4வது அணு உலை கட்டுமானப் பணிகள் முடியும் என பாக்., வட்டாரம் தெரிவித்துள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக