தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

3.8.11

முஸ்லிம்களுக்கு எதிரான கட்டுரை:சுப்ரமணிய சுவாமியின் மீது வழக்கு தொடர சிறுபான்மை கமிஷன் முடிவு


subramaniyaswamy
புதுடெல்லி:கடுமையான வகுப்புவாத வெறியுடன் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டுரை எழுதிய சுப்ரமணியசுவாமி மீது வழக்கு தொடர தேசிய சிறுபான்மை கமிஷன் முடிவுச்செய்துள்ளது.
மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் டி.என்.எ பத்திரிகையில் சுப்ரமணிய சுவாமி முஸ்லிம்களின் வாக்குரிமையை பறிக்கவேண்டும் உள்பட கடுமையான வகுப்புவாத விஷக்கருத்துக்களை

கடாபியின் சொத்துக்களை போராட்டக்காரர்களுக்கு அளிக்க பிரான்ஸ் முடிவு


தங்கள் நாட்டில் முடக்கப்பட்ட லிபியா அதிபர் கடாபியின் சொத்துகளை லிபிய போராட்டக்காரர்களுக்கு அளிக்கப்போவதாக பிரான்ஸ் அறிவித்துள்ளது.
இதன்படி கடாபிக்கு சொந்தமான சுமார் 25.90 கோடி டாலர் தொகையை, லிபிய போராட்டக்காரர்களுக்கு பிரான்ஸ் அளிக்க உள்ளது. போராட்டக்காரர்களின் தேசிய மாற்ற கவுன்சில் இந்த நிதியை உணவு,

ஜெ.வை எதிர்த்து போஸ்டர் ஒட்டிய தவ்ஹீது ஜமாத்தினர் கைது!


கடையநல்லூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் இருவர் முதல்வர் ஜெயலலிதாவைக் கண்டித்து போஸ்டர் ஒட்டியதற்காக கைது செய்யப்பட்டனர். இதைக் கண்டித்து நூற்றுக்கணக்கான தமிழக தவ்ஹீது ஜமாத்தினர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

நேற்று தொடங்கியுள்ள குளிர்கால கூட்டத்தொடரில் மத்திய அரசு வகுப்பு கலவர தடுப்பு மசோதாவை அறிமுகம் செய்ய முடிவெடுத்துள்ளது. இந்த மசோதா மாநில அரசின் உரிமையில் தலையிடுவதாக குற்றம் சாட்டி தமிழக முதல்வர் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இரண்டு ஃபலஸ்தீனர்களை சுட்டுக்கொன்ற இஸ்ரேலிய ராணுவம்


israel_gaza_mourners_Militants-Killed-airstrike
ராமல்லா:ஆக்கிரமிப்பு மேற்குகரையில் அகதி முகாமில் இரண்டு ஃபலஸ்தீனர்களை இஸ்ரேலிய ராணுவம் சுட்டுக்கொன்றுள்ளது. 23 வயது மற்றும் 25 வயதுடைய இளைஞர்களின் தலையிலும், அடிவயிறிலும் குண்டு பாய்ந்துள்ளதாக சுகாதார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் குறித்து விசாரிப்பதாக இஸ்ரேலிய ராணுவ செய்தி தொடர்பாளர் பதிலளித்துள்ளார்.

முன்னாள் எகிப்திய நிதியமைச்சருக்கு 30 ஆண்டு சிறைத்தண்டனை


77917004-exegyptian-finance
கெய்ரோ:எகிப்தின் முன்னாள் நிதியமைச்சர் யூசுஃப் புத்ரோஸ் காலிக்கு ஊழல் வழக்கில் 30 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.ஆனால் கலியை இதுவரை கைதுச்செய்ய முடியாததால் அவர் ஆஜர்படுத்தப்படாமலேயே நீதிமன்றம் இத்தண்டனையை விதித்துள்ளது.
தலைமறைவாக இருப்பதால் யூசுஃப் புத்ரோஸ் காலிக்கு மேல்முறையீடு செய்யவியலாது. அதேவேளையில் காலியின் குடியுரிமை குறித்து பிரச்சனைகள் இருப்பதாக எகிப்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.