தங்கள் நாட்டில் முடக்கப்பட்ட லிபியா அதிபர் கடாபியின் சொத்துகளை லிபிய போராட்டக்காரர்களுக்கு அளிக்கப்போவதாக பிரான்ஸ் அறிவித்துள்ளது.
இதன்படி கடாபிக்கு சொந்தமான சுமார் 25.90 கோடி டாலர் தொகையை, லிபிய போராட்டக்காரர்களுக்கு பிரான்ஸ் அளிக்க உள்ளது. போராட்டக்காரர்களின் தேசிய மாற்ற கவுன்சில் இந்த நிதியை உணவு,
மருந்து பொருட்கள் போன்ற மனித நேய பணிகளுக்கு பயன்படுத்தும். தேசிய மாற்றக் கவுன்சிலின் பிரான்ஸ்க்கான புதிய தூதர் மன்சூர் சய்ப் அல் நசீப், பிரான்ஸ் அயலுறவுவுத் துறை அமைச்சர் அலய்ன் ஜீபேவை சந்தித்தார். இந்த சந்திப்புக்கு பின்னர் மன்சூர் கூறுகையில், "கடாபியின் நிதி லிபிய மக்களுக்கு உரியது. இந்த நிதி உணவு, மருந்துகள் வாங்க பயன்படும்" என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக