சமீபத்தில் கொலராடோ அருகிலுள்ள டென்வர் சினி மா மாலில் ஜூலை 20- ஆம் தேதி பேட்மேன்- 3 திரை ப்படம் திரையிடப்பட்டது. அப்போது பட்டதாரி வாலி பரான ஜேம்ஸ் ஹோம்ஸ் கண்மூடித்தனமாக சுட்ட தில் 12 பேர் கொல்லப்பட்டனர். ஐம்பதுக்கும் மேற்ப ட்டோர் படுகாயமடைந்தனர். மிக மோசமான கொ லைக் குற்றவாளியாக ஜேம்ஸ் ஹோம்ஸ் மீதான கொலைகுற்றம் நிருபிக்கப்பட்டால் மரண தண்ட னை பெறுவான் என்று கூறப்படுகிறது. இந்த மிக மோசமான படுகொலைக்குப் பிறகு
கைது செய்யப் பட்ட அவனுக்கு கடந்த வருடங்களில் இல்லாத இந் த கொலைக்குற்றத்திற்காக
நீதிமன்றத்தின் கடுமையான தீர்ப்பை எதிர்பார்ப்பா ன் என்று கூறப்படுகிறது.
கொலராடோ நீதிமன்ற விசாரணைக்கு இரண்டாவது முறையாக வந்த 24 வயது ஜேமேஸ் ஹோல்மேஸ்க்கு இன்னும் சில மாதங்களில் மரணதண்டனை தீர்ப்பு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
மனித உயிருக்கு தீங்கு விளைவிக்கும் இந்த படுபாதக செயலை திட்டமிட்டு அரங்கேற்றம் செய்ததாக அவன் மீது கடுமையாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பேட்மேன் காமிக் புத்தகத்தில் வரும் பழிவாக்கும் பாத்திரத்தைப்போல் தன்னை மாற்றிக்கொண்ட அவன், சிறைச்சாலையிலிருந்து நீதிமன்றத்திற்கும் அவ்வாறே வந்திருக்கிறான்.
செய்தியாளர்கள், பாதிக்கப்பட்டோரின் உறவினர்கள் கூடியிருந்த நீதிமன்றத்தில் மிக சோர்வாக களைப்புடன் காணப்பட்ட அவன், தலையை கீழே குனிந்தவாறே 45 நிமிட விசாரணையில் மிகுந்த எச்சரிக்கையுடன் பதற்றமில்லாமல் பதிலளித்திருக்கிறான்.
சான்டியாகோ பகுதியைச் சேர்ந்த நியுரோ சயின்ஸ் மாணவரான ஜேமேஸ் ஹோல்மேஸ் தன்னை ஒரு ஜோக்கர் என்று கூறிக்கொள்கிறான். அவன் மனநலம் பாதிக்கப்பட்டு உள்ளான் என்றும் கூறப்படுகிறது.
சுட்டபோது அவனிடமிருந்து 223 செமி ஆட்டோமேடிக் ரைபிள், ஏ.ஆர். 15 அசால்ட் ரைபிள், 12 கேஜ் ஷாட் கன், கேலிபர் கைத்துப்பாக்கி போன்ற ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக