சென்னை உயர்நீதி மன்றம் தமிழக அரசுக்கு உத்தர விட்டதன் பேரில், பள்ளிக் குழந்தைகளுக்கு புதிய பா துகாப்பு நெறிமுறைகள் அடங்கிய பட்டியல் தயாரிக் கப் பட்டுவிட்டதாகவும் இந்த பாதுகாப்பு நெறிமு றைப் பட்டியல் நாளை சென்னை உயர்நீதி மன்றத் தில் தமிழக அரசு சார்பாக தாக்கல் செய்யப்படவிரு ப்பதாகவும் தெரிகிறது.கடந்த புதன்கிழமை பள்ளிப் பேருந்து ஓட்டை வழியாக கீழே விழுந்து விபத்துக் குள்ளான சிறுமி சுருதி அந்த பள்ளிப்
பேருந்தின் பின்சக்கரம் ஏறி சம்பவ
இடத்திலேயே இறந்து போனார். இதை அடுத்து இந்த வழக்கை விசாரித்து வந்த சென்னை உயர்நீதிமன்றம், பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்புக்கு புதிய பாதுகாப்பு நெறிமுறைகளை தயாரிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஆணை பிறப்பித்தது.பேருந்தின் பின்சக்கரம் ஏறி சம்பவ
அதன்படி, பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்புக்கு புதிய பாதுகாப்பு நெறிமுறைகள் அடங்கியப் பட்டியல், சென்னை எழிலகத்தில் தொடக்கப் பள்ளி ஆணையர், பள்ளிக் கல்வி இயக்குனர், போக்குவரத்துத் துறை ஆணையர், காவல்துறை ஆணையர் ஆகியோர் அடங்கிய குழு சென்னை உயர்நீதி மன்ற தலைமை வழக்கறிஞர் முன்னிலையில் தயாரிக்கப் பட்டது.
இந்த புதிய பாதுகாப்பு நெறிமுறைப் பட்டியலை நாளை சென்னை உயர்நீதி மன்றத்தில் தமிழக அரசு சார்பாக தாக்கல் செய்யப் படும் என்றும் தெரிகிறது. இந்நிலையில் இன்று ஆறாவது நாளாக போக்குவரத்து துறை அதிகாரிகள் நாடு முழுவதும் பள்ளி, கல்லூரி வாகனங்களின் பாதுகாப்பு பற்றிய சோதனையில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக