சூரியக் கதிர் படையெடுப்பின் பின்னர் யாழ்ப்பாண த்தில் இராமலிங்கம் ஏற்றிய நந்திக்கொடி காணாம ல் போனது போல அமெரிக்கர்கள் சந்திரனில் 1969 ஏற்றிய கொடி காணாமல் போனது நேற்றைய கூத் தாட்டமாகும்.இப்போது சீனர்களின் காலம் வந்துள் து..இன்று அதிகாலை ஐரோப்பாவில் வெளியான செய்திகள் சீனாவின் சந்திரமண்டலப் பயணத்திற்கா ன பணிகள் ஆரம்பித்துவிட்டன என்று தெரிவித்துள் ளன.அடுத்த ஆண்டு சீனாவின் விண்வெளி வீரர்கள் சந்திரத் தரையில் கால் பதி
க்க இருக்கிறார்கள், இதற்கான பணிகள் அசுர வேக த்தில் நடைபெற்று வருகின்றன.
சீன தலைவர்கள் ஒரு விடயத்தில் மிகவும் தெட்டத் தெளிவாக இருக்கிறார்கள், தமது பயணம் சரியாக நடைபெற வேண்டும், உண்மையாக நடைபெற வேண்டும் என்பதில்.
சந்திரத் தரையில் மனிதன் கால் பதிக்கும் இந்த முயற்சி சீனாவை ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்னர் உலகின் முதலாவது வல்லரசாக தலை நிமிர வைக்கும் என்று கருதப்படுகிறது.
சீனர்களின் சந்திரமண்டலத்திற்கான மனிதப் பயணம் உண்மையிலேயே அமெரிக்கக் கொடி சந்திர மண்டலத்தில் நாட்டப்படவில்லை என்ற உண்மையை விடுவிக்கலாம் என்று நேற்று அலைகளில் எழுதியிருந்தோம்.
உலக மாந்தரால் போக முடியாத ஒரு கிரகத்தை எடுகோளாக எடுத்துக் கொண்டு, அங்கு நாம் போய் இறங்கிவிட்டதாக கதை அளந்தால் அதை மறுக்க எவராலும் முடியாது.
இன்னொருவர் உண்மையாக அங்கு போகும்வரை அந்த ஏமாற்று செல்லுபடியாகும் என்பதை இப்போது ஊகிக்க முடிகிறது.
இதுபோல வைரமுத்துவின் மூன்றாம் உலகப் போர் என்ற நூல் வெளியீட்டு விழாவில் பேசிய ஜெயகாந்தன் புவி வெப்பமடைவதால் மனித குலம் அழியும் என்று எழுதாதீர்கள் என்று கேட்டிருந்தார்.
புவியில் அழியா வரமாக மனித குலம் நிலைக்கும் என்ற நம்பிக்கையை வளருங்கள் என்றும் கூறினார்.
2012 என்ற ஆங்கிலப்படத்தில் காட்டியது போலவும், புவி வெப்பமாதல் மாநாட்டில் புவி அழிந்துவிடக்கூடிய அபாயம் இருக்கிறதென கூறப்பட்ட கருத்துக்களை அடியொற்றி வைரமுத்துவின் மூன்றாம் உலகப்போர் எழுதப்பட்டுள்ளது.
ஆனால் புவி வெப்பமாதலை தடுக்க ஐ.நா கேட்கும் பணம் மிகப்பெரிய மோசடித் தொகையாக இருக்கிறது.
அமெரிக்கரின் சந்திரமண்டல கொடி காணாமல் போனது போலத்தான் இந்த புவி வெப்பமாதல் கூத்தாட்டமும் கடைசியில் முடியுமா என்பது சுவாரஸ்யமான கேள்வியே.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக