21.1.11
திருக்குர்ஆன் பிரதிகளை எரிக்க அழைப்புவிடுத்த டெர்ரி ஜோன்ஸிற்கு பிரிட்டனில் தடை
லண்டன்,ஜன.21:திருக்குர்ஆனின் பிரதிகளை எரிக்க அழைப்புவிடுத்த அமெரிக்காவில் கிறிஸ்தவ பாதிரி டெர்ரி ஜோன்ஸிற்கு பிரிட்டன் தடை விதித்துள்ளது.
பொதுநலத்தை கவனத்தில் கொண்டு பிரிட்டனில் நுழைய டெர்ரி ஜோன்ஸிற்கு தடை விதித்துள்ளதாக பிரிட்டனின் உள்துறை அமைச்சக அலுவலகம் அறிவித்துள்ளது.
மில்டன் கெய்ன்ஸில் தீவிர வலதுசாரி அமைப்பு ஒன்று ஏற்பாடுச் செய்துள்ள நிகழ்ச்சியில் உரை நிகழ்த்த டெர்ரி ஜோன்ஸிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
பிரிட்டன் அரசு எல்லாவகை தீவிரவாதங்களையும் எதிர்ப்பதால் டெர்ரி ஜோன்ஸிற்கு தடை விதித்துள்ளதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
பிரிட்டனின் தீர்மானத்திற்கெதிராக நீதிமன்றத்தை அணுகப் போவதாக ஜோன்ஸ் அறிவித்துள்ளார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ் நன்றி: பாலைவன தூதுஇந்த இடுகை(post)தங்களை கவர்ந்திருந்தால் கீழே உள்ள இன் ட்லியில் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்களேன்.நன்றி

இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
10:19 PM
0
கருத்துகள்
லேபிள்கள்:
கிறிஸ்தவ பாதிரி டெர்ரி ஜோன்ஸிற்கு பிரிட்டன் தடை

இஸ்லாமாஃபோபியாவிற்கு பிரிட்டனில் ஆதரவு அதிகரிக்கிறது - பரோணஸ் ஸயீத் வார்ஸி
இந்த இடுகை(post)தங்களை கவர்ந்திருந்தால் கீழே உள்ள இன் ட்லியில் ஒரு
லண்டன்,ஜன.21:முஸ்லிம்களுக்கெதிராக திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் பிரச்சாரங்கள் வழக்கமாகிவிட்டது எனவும், இதற்கு சமூக ரீதியாக ஆதரவு கிடைப்பதாகவும் டோரி கட்சியின் துணைத் தலைவரும் பிரிட்டன் அமைச்சரவையில் முதல் மூத்த முஸ்லிம் பெண் அமைச்சருமான பரோணஸ் ஸயீத் வார்ஸி தெரிவித்துள்ளார்.
முஸ்லிம்களை தீவிரவாதிகள்,மிதவாதிகள் என தரம் பிரிக்கும் நடவடிக்கைக்கு எதிராக ஸயீத் வார்ஸி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இஸ்லாத்தை குற்றவாளிக் கூண்டில் நிறுத்திவிட்டு ஊடகங்கள் நடத்தும் விவாதங்களை எதிர்க்கொண்டு ஸயீத் வார்ஸி லீஸெஸ்டர் பல்கலைக்கழகத்தில் உரை நிகழ்த்த உள்ளார்.
அவரது உரையின் முக்கிய பகுதிகளை டெய்லி டெலிகிராஃப் பத்திரிகை வெளியிட்டுள்ளது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ் ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்களேன்.நன்றி

10:12 PM
0
கருத்துகள்
லேபிள்கள்:
இஸ்லாமாஃபோபியாவிற்கு பிரிட்டனில் ஆதரவு

ஆர்.எஸ்.எஸ் இன் தோற்றம் பார்ப்பனிய மீட்சிக்காகவே!
வட இந்தியாவில் குமாஸ்தக்களை உருவாக்கும் ஆங்கிலக் கல்விமுறையின் பரவலால் ஒடுக்கப்பட்ட மக்கள் ஓரிருவர் முன்னேறியதைப் பார்த்து தமது அஸ்திவாரத்தில் லேசான ஆட்டம் கண்டு போயிருந்த பார்ப்பனியர்கள் வருணாசிரம இந்து தரும ஆதிக்கத்தைக் காப்பாற்றவும், சமஸ்கிருதத்தை மீண்டும் உயிர்த்தெழ வைக்கும் நோக்கத்திற்காகவும் கட்டி அமைக்கப்பட்டது தான் ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கம்.
1925க்குப் பிறகு ஆர்.எஸ்.எஸ் எப்படி பரவியது? யார் உதவினார்கள்? சுதந்திரப் போராட்டம் தங்களது நிகழ்ச்சி நிரலில் இல்லை என்பதில் தீர்மானகரமாய் இருந்தது ஆர்.எஸ்.எஸ். இயக்கம். எனவே அவர்களை வெள்ளையர்கள் குண்டாந் தடிகளுடன் இராணுவ பயிற்சி செய்வதற்கு அனுமதித்தார்கள். அந்த விசுவாசத்தை ஆர்.எஸ்.எஸ் தலைவர்களிடம் நிறைய சந்தர்பங்களில் நாம் காணலாம். உதாரணத்திற்கு ஒன்று.
“We should remember that in our pledge we have talked of freedom of the country through defending religion and culture. There is no mention of departure of British in that.” (Shri Guruji Samgra Darshan, Vol 4, p. 2)”
இது ஆர்.எஸ்.எஸ் காரர்கள் “குருஜி” என்று ஏற்றிப் போற்றும் அவர்களது இரண்டாவது தலைவர் கோல்வால்கர் கொடுத்துள்ள ஒப்புதல் வாக்குமூலம். இப்படித்தான் ஆங்கிலேயர்கள் ஆசிர்வாதத்துடனும், மேல்மட்ட பார்ப்பனிய சனாதனிகளின் உதவயுடனும் நாட்டின் பல்வேறு இடங்களுக்கு ஆர்.எஸ்.எஸ் பரவியது.
ஜமீன்தார்கள், நிலப் பிரபுக்களிடம் நன்கொடை திரட்டி பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகத்தை உருவாக்கியிருந்தார் காங்கிரஸ்காரரும் இந்து மகாசபையை தோற்றுவித்தவர்களுள் ஒருவருமான மதன் மோகன் மாளவியா. இந்த பல்கலைக்கழகத்தில் ஆர்.எஸ்.எஸ்க்கு என்று தனியாக கட்டிடமே கட்டிக் கொடுதிருந்தார். இத்தகைய புரவலர்களால்தான் ஆர்.எஸ்.எஸ் நாடெங்கும் பரவியது நன்றி: சிந்திக்கவும் இணையதளம் இந்த இடுகை(post)தங்களை கவர்ந்திருந்தால் கீழே உள்ள இன் ட்லியில் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்களேன்.நன்றி

கறுப்புப் பண விவரத்தை பகிரங்கமாக வெளியிட முடியாது: பிரதமர்
அப்போது, கறுப்புப் பண முதலைகளின் பட்டியலை வெளியிட மறுப்பது தொடர்பாக மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த மன்மோகன்சிங் கூறியதாவது:
வெளிநாடுகளில் உள்ள கறுப்புப் பணத்தைக் கொண்டு வருவதற்கு உடனடி திடீர் தீர்வு எதுவும் இல்லை. இந்த வங்கி கணக்குகள் தொடர்பாக உரிய வரியை வசூலிப்பதற்காக சில தகவல்கள் மத்திய அரசுக்கு கிடைத்து உள்ளன.
இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு என்ன கூறியிருக்கிறது என்பது எனக்கு தெரியாது. ஆனால், என்ன நோக்கத்திற்காக அந்த கணக்கு விவரங்கள் கிடைத்து இருக்கிறதோ, அதை தவிர வேறு எதற்கும் அந்த தகவலை பயன்படுத்த முடியாது. அதை பொதுமக்கள் மத்தியில் பகிரங்கமாகவும் அறிவிக்க முடியாது. சர்வதேச ஒப்பந்தங்களை மீறி இதில் நாம் எதுவும் செய்துவிட முடியாது.''
இவ்வாறு மன்மோகன்சிங் கூறினார்.
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணை கோரி நாடாளுமன்றம் முடக்கப்படுவதற்கு சுமூக தீர்வு காண்பதற்கு அரசு தயாராக உள்ளது. அதற்கான அனைத்து வழிமுறைகள் பற்றியும் பரிசீலிக்கப்படும்.
நாடாளுமன்றம் செயல்பட வேண்டும் என்றும் அனைத்து பிரச்சினைகள் குறித்தும் அங்கு விவாதிக்கப்பட வேண்டும் என்றுதான் அரசு விரும்புகிறது. எந்த ஒரு விவாதத்துக்கும் நாங்கள் பயப்படவில்லை.
விலைவாசி உயர்வை பொறுத்தவரை சில அம்சங்கள் அரசின் கட்டுப்பாட்டை மீறியதாக உள்ளது. அதுபற்றி உறுதியாக கணித்துச் சொல்வதற்கு நான் ஒன்றும் ஜோதிடர் அல்ல. ஆனால், வருகிற மார்ச் மாதத்திற்குள் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்திவிட முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.
தனி தெலுங்கானா விவகாரம் குறித்து ஆந்திர மாநில அரசியல் கட்சி தலைவர்களுடன் மத்திய உள்துறை மந்திரி பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார். ஸ்ரீகிருஷ்ணா கமிட்டியின் அறிக்கை விவரங்களை அவர்கள் முழுமையாக படித்து பார்த்தபின் இந்த கோரிக்கை குறித்து மீண்டும் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும்.
மொத்த உற்பத்தி: அமெரிக்காவை மிஞ்சியது சீனா
டெல்லி: மொத்த உற்பத்தியில் உலகின் சூப்பர் பவர் எனக் கருதப்பட்ட அமெரிக்காவை மிஞ்சிவிட்டது சீனா என்று புதிய புள்ளி விவரங்கள் கூறுகின்றன. ஆனால் இதுபற்றி சர்வதேச பொருளாதார அமைப்புகள் அறிவிப்பு வெளியிடாமல் உள்ளன.
உலக நாடுகளின் மொத்த உற்பத்தி (ஜிடிபி), வாங்கும் திறன் போன்றவை குறித்த புதிய புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளன.
பென்சில்வேனியாவைச் சேர்ந்த பென் வேர்ல்ட் டேபிள் (Penn World Table) கணக்கீட்டின்படி (இந்த புள்ளி விவரம் இன்னமும் வெளியிடப்படவில்லை), ஜிடிபியில் உலகிலேயே முதலிடத்தில் உள்ள அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளிவிட்டது சீனா. இதன்படி சீனாவின் மொத்த உற்பத்தி 14.8 ட்ரில்லியன் டாலர்களாகும் (முன்பு 10.1 ட்ரில்லியன் என மதிப்பிடப்பட்டது). சீனாவின் நகர்ப்புற விலை நிலைகளின் அடிப்படையிலும், சீன நாணத்தின் மாற்றியமைக்கப்பட்ட மதிப்பீட்டின் அடிப்படையிலும் கணக்கிடப்பட்ட மதிப்பீடு இது.
அமெரிக்காவின் ஜிடிபி மதிப்பு 14.6 ட்ரில்லியன் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த கணக்கீட்டின்படி இந்தியா வின் மொத்த உற்பத்தி மதிப்பும் 13 சதவீதம் உயர்ந்துள்ளதாம். இதன்படி இந்தியாவின் ஜிடிபி 4.4 ட்ரில்லியன் டாலர்கள் (முன்பு 4 ட்ரில்லியன்) என்று கூறப்படுகிறது.
இன்னும் இந்த புள்ளிவிவரங்கள் அதிகாரப்பூர்வ வெளியிடப்படவில்லை என்றாலும், உலகம் முழுக்க பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.இந்த இடுகை(post)தங்களை கவர்ந்திருந்தால் கீழே உள்ள இன் ட்லியில் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்களேன்.நன்றி

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)