தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

17.4.12

பாகிஸ்தான் சிறைச்சாலை ஒன்றிலிருந்து 400 சிறைக்கைதிகள் தப்பியோட்டம்


பாகிஸ்தானில் சிறைச்சாலை ஒன்றிலிருந்து சுமார் 400 கைதிகள் தப்பிச்சென்றுள்ளனர்.சிறைச்சாலை மீது இஸ் லாமிய போராளிகள் தாக்குதல் நடத்தியதன் மூலம் கை திகள் தப்பிச்செல்வதற்கு உதவியுள்ளதாக தகவல் வெ ளியாகியுள்ளது. பாகிஸ்தானின் வட மேற்கு பகுதியில் அமைந்துள்ள கிபார் பக்துவுங்காவின் பன்னு சிறைச்சா லை மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.இதன் போது பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி பேர்விஸ் முஷா ரப்பை படுகொலை செய்ய
முயற்சித்த சந்தேக நபர் உள்ளிட்ட 20க்கு மேற்பட்ட ஆபத்தான சிறைக்கைதிகளும் தப்பிச்சென்றுள்ளதாகவும், இவர்களில் பெரும்பாலானோர் தீவிரவாத செயல்களுடன் தொடர்புடையவர்களாக இருந்தனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இத்தாக்குதல் நடவடிக்கைக்கு தலிபான்கள் உரிமை கோரியுள்ளனர்.

பன்னு சிறைச்சாலையிலிருந்து நூற்றுக்கணக்கானோரை தாம் விடுவித்துள்ளதாகவும் அவர்களில் சிலர் தங்களது இருப்பிடங்களை சென்றடைந்துள்ளதுடன் ஏனையவர்கள் இருப்பிடங்களுக்கு வந்து கொண்டிருப்பதாக தலிபான் பேச்சாளர் ராய்டர் இணையத்தளத்திற்கு தகவல் அளித்துள்ளார்.

இரு மணிநேரமாக நடைபெற்ற தாக்குதலில் 3 பொலிஸார் காயமடைந்துள்ளதாக பன்னு பிரதேச மூத்த காவற்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். குறித்த தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு தாக்குதல், கிரணைட்டு தாக்குதல் மூலம் கைதிகளை விடுவித்து டிராக் வண்டிகளில் ஏற்றிச்சென்றதாக காவற்துறை விசாரணை தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த வருடம் ஏப்ரல் மாதம் ஆப்கானிஸ்தானில் கந்தகாருக்கு அருகில் உள்ள சிறைச்சாலை ஒன்றின் மீது தலிபான்கள் தாக்குதல் நடத்தி 470 சிறைக்கைதிகளை விடுவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

0 கருத்துகள்: