தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

17.4.12

அணு ஆயுதம் திட்டம் குறித்து ஈராக்கில் பேச்சுவார்த்தை நடத்த ஈரான் உள்பட 6 நாடுகள் ஒப்புதல்.

இராக் தலைநகர் பாக்தாதில் மே மாதம் 23-ம் தேதி விரிவா ன பேச்சுவார்த்தை நடத்துவது என ஈரானும் மற்ற 6 நாடுக ளும் ஒப்புக்கொண்டுள்ளன.அமெரிக்கா, ரஷியா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, சீனா ஆகிய 6 நாடுகளுக்கும் ஈரானுக் கும் இடையே ஈரானின் அணு ஆயுதத் திட்டம் குறித்த பேச் சுவார்த்தை சனிக்கிழமை இஸ்தான்புல்லில் தொடங்கிய து. 15 மாதங்களுக்குப் பிறகு நடந்த இந்தப் பேச்சுவார்த்தை யில் மேற்கண்டவாறு
முடிவெடுக்கப்பட்டது.ஈரான் தரப்பு த் தலைமைப் பேச்சாளரான சயீத் ஜலிலியுடன் இஸ்தான் புல்லில் நடந்தபேச்சுவார்த்தை ஆக்கபூர்
மாக உபயோகமாக' இருந்தது என ஐ ரோப்பிய யூனியனின் தலைமை வெளியுறவு கொள்கை வகுப்பாளரான கேத்தி ரைன் ஆஷ்டன் தெரிவித்தார்.

 மே மாதம் இராக்கில் நடக்கவிருக்கும் பேச்சுவார்த்தை திட்டவட்டமான பாதையை நோக்கி நம்மை முன்னகர்த்தும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

 ஈரானின் அணு ஆயுதத் திட்டம் தொடர்பாக தொடர்ந்து பேசியாக வேண்டுமென அமெரிக்கா உள்பட மேற்கு நாடுகள் பேச்சுவார்த்தையின்போது வலியுறுத்தின என்று அவர் கூறினார்.

 ஈரானின் 'ஆக்கபூர்வமான அணுகுமுறையை' வரவேற்பதாக அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் பென் ரோட்ஸ் கூறினார்.

 "இலக்கை நோக்கி முதல் அடியை ஈரான் எடுத்து வைத்துள்ளது. எனினும் நெடுந்தொலைவைக் கடக்க வேண்டியுள்ளது' என்று பிரிட்டனின் வெளியுறவுத் துறை அமைச்சர் வில்லியம் ஹேக் எச்சரிக்கையுடன் குறிப்பிட்டார்.

 "நம்பிக்கையை உருவாக்கும் விதத்தில் அவசரமாகவும் உறுதியாவும் ஈரான் செயல்பட வேண்டும்' என பிரான்சின் வெளியுறவுத் துறை அமைச்சர் அலெய்ன் ஜுப் தெரிவித்தார்.

 ஈரான் மேற்கொண்டுவரும் அணு ஆயுதத் திட்டத்துக்கு எதிராக ஐ.நா. இதுவரை 4 தடைகளை அந்நாட்டின் மீது விதித்திருக்கிறது.

 இருப்பினும், அணு ஆயுதம் தயாரிப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை ஈரான் தொடர்ந்து மறுத்து வருகிறது.

 சர்வதேச சமூகத்தின் குறிப்பாக ஈரானின் பரம எதிரியான இஸ்ரேல், யுரேனியத்தை செறிவூட்டும் தொழில்நுட்பத்தில் ஈரான் வளர்ந்துவருவதாக சந்தேகப்படுகிறது.

0 கருத்துகள்: