ஃபைசாபாத் : தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதாக கூறி உத்தரபிரதேச சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள அப்பாவி முஸ்லீம் சிறை கைதிகள் விரைவில் சிறையில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என்று உத்தரபிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார். சமாஜ்வாதி கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் பாண்டேவின் திருமணத்தில் கலந்து கொள்ள வந்த அகிலேஷ் ஃபைசாபாத் மற்றும் லக்னோ நீதிமன்ற வளாகங்களில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகள் தொடர்பாக கைது செய்யப்பட்ட முஸ்லீம் இளைஞர்கள் மீதான வழக்கை வாபஸ்
வாங்குதல் தொடர்பாக சட்ட அமைச்சகத்திடம் ஆலோசனை கேட்டிருப்
பதாக கூறினார். மேலும் தங்கள் தேர்தல் அறிக்கையில் கூறிய படி சிறையில் இருக்கும் அப்பாவி முஸ்லீம்கள் அனைவரும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அகிலேஷ் கூறினார்.

பிறந்த குழந்தைகள் வறுமையின் காரணமாக விற்கப்படுவதாக வரும் செய்திகளில் உண்மை இருந்தால் வறிய குடும்பங்களுக்கு உதவி செய்யப்படுவதன் மூலம் தடுத்து நிறுத்தப்படும் என்றும் அகிலேஷ் கூறினார். தான் ஏற்கனவே சொன்னதை போல் மாயாவதி உள்ளிட்டோரின் சிலைகளை எதுவும் செய்ய மாட்டேன் என்று சொன்ன அகிலேஷ் அப்பூங்காக்களில் உள்ள வெற்றிடங்களில் கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக