ஸ்தம்பித்து போன சென்னை- அழைகடலென திரண்ட மக்கள் கூட்டம்! அல்ஹ்ம்துலில்லாஹ்!
ஜனவரி 27 பாபர் மஸ்ஜித் வழக்கின் அநியாயத்தீர்ப்பை கண்டித்து நடைபெற்ற போராட்டப் புகைப்படங்கள்

பா.ஜ.க தலைமையிலான அந்த மதவெறி சக்திகள் இன்று (26,ஜனவரி.2011) காஷ்மீர் ஸ்ரீநகரில் குடியரசு தினத்தையொட்டி தேசிய கொடியை ஏற்றப்போவதாக அறிவித்து பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. காக்காய் பிடிப்பதில் வல்லர்களான 'காவி' வந்தேறிகள் ஆங்கில 'வந்தேறிகளோடு' கைக்கோர்த்து பிரிட்டிஷ் ஆண்டைகளின் அடிமைகளாக செயல்பட்ட இவர்களால் 'மூவர்ண தேசியக் கொடி' சுதந்திரப் போராட்ட காலத்தில் ஒருபொழுதும் பிடிக்கப்பட்டதே இல்லை. ஒட்டு மொத்த இந்தியாவே ஆங்கிலேய அரசை எதிர்த்த போது இவர்கள் மட்டும் பிரிட்டிஷாருக்கு வக்காலத்து வாங்கி ஒத்து ஊதினர் என்பது வரலாறு. இந்திய தேசியக் கொடியை கையிழேந்தும் அருகதை சங்பரிவாரத்திற்கு உள்ளதா? என்று வரலாற்றை ஆராய்ந்து பார்த்தால் உண்மை விளங்கும்.
சில ஆண்டுகளுக்கு முன்பாக ஜோசியத்தை பள்ளிக் கல்லூரிகளில் பாடமாக்க வேண்டும் என்று முன்மொழிந்த முரளிமனோகர் ஜோஷீ தலைமையில் ஸ்ரீநகர் லால்சௌக்கிலும், உமாபாரதி தலைமையில் கர்நாடக ஈத்கா மைதானத்தில் தேசிய கொடியேற்றி கலவரம் விளைவிக்க முயன்றனர். ஹிந்துக்களுக்கு மதவெறி ஊட்ட காவிக் கொடியையும் முஸ்லிம்களின் மீது தாக்குதல் நடத்த மூவர்ணக் கொடியையும் சந்தர்பத்திற்கு தகுந்தாற்போல் பயன்படுத்தி வந்திருக்கிறது. பாப்ரி பள்ளிவாசலை இடிப்பதற்காக அதன் மண்டபங்களின் மீது ஏறிய ஹிந்து வன்முறைகும்பலின் கையில் 'காவி' கொடி இருந்ததை நாமெல்லாம் மறந்திருக்க முடியாது.