டோக்கியோ,மார்ச்.14:எனது அருகிலேயே இருக்கவேண்டுமென்ற தாயின் வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டிருந்தால், இவ்வளவுதூரம் துயரத்திற்கு ஆளாக வேண்டியதில்லை. வீடும், குடும்பமும் எல்லாவற்றையும் இழந்துவிட்டு நான் மட்டும் உயிரோடு வாழ்ந்து என்ன பயன்? ஜப்பானின் மியாகியில் ஷின்டோனா கிராமத்தில் ஹரூமிவதனாபெயின் வார்த்தைகள்தாம் இவை.எச்சரிக்கை தகவல் கிடைத்த உடனேயே, பூகம்பம் ஏற்படுவதற்கு ஏறத்தாழ அரைமணி நேரம் முன்பே கடையை பூட்டிவிட்டு விரைவாக வீடு திரும்பினார் அவர். வீட்டு கதவை தகர்த்தெறிந்த பேரலை வயோதிகரான பெற்றோரை தூக்கி வீசிய காட்சிகளைத்தான் அவரால் பின்னர் காணமுடிந்தது.




