
உலகில் இதுவரை அறியப்பட்டவற்றில், அதிக வேகமாக பயணிக்கும் திறன் கொண்ட ஹைபர்சோனிக் விமானம் (ஒலி விமானம்) நேற்றைய
பரிசோதனை நடவடிக்கையின் போது காணாமல் போய்விட்டதாக அமெரிக்க பெண்டகன் விமான கட்டுப்பாட்டு மையம் அறிவித்துள்ளது. ஒலியின் 20 மடங்கு வேகத்தில், பயணிக்கும் திறன் கொண்ட இவ்விமானம் இரண்டாவது தடவையாக பரிசோதிக்கப்பட்ட போதே கட்டுப்பாட்டை இழந்துவிட்டதாக பெண்டகன் தெரிவித்துள்ளது.