மியான்மாரின் மேற்கு மாநிலமான ராக்கைனில் கட ந்த 3 நாட்களில் இடம்பெற்ற கலவரங்களில் பலியா னோர் தொகை மொத்தம் 56 ஆக உயர்வடைந்துள்ள து.இதில் 31 பேர் பெண்கள் ஆவார்கள். மேலும் 64 பே ர் காயமடைந்திருப்பதாகவும் உள்நாட்டு அதிகாரிக ள் வியாழக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளனர்.பௌத் த ராகின் இன மக்களுக்கும், இஸ்லாமிய ரோஹிங் யா இனத்தவர்களுக்கும் இடையே இக்கலவரங்கள் மூண்டுள்ளன. பரம்பரையாக மியன்மாரில் வாழ்ந்து வரும் பல இஸ்லாமிய
ரோஹிங்யா இனத்தவர்கள் இன்னமும் அந்நாட்டின் குடிமக்களாக ஏற்றுக்கொள்ளப்படாது வெளிநாட்டவர்களாகவே பார்க்கப்ப டுவதுடன், அவர்கள் பங்களாதேஷிலிருந்து இங்கு வந்து அரிதான நிலங்களை திருடிவாழ்கிறவர்கள் என பௌத்த ராகின் இன மக்கள் குற்றம் சுமத்துகின்ற னர். இதுவும் இக்கலவரங்களுக்கு பிரதான காரணம் ஆகும். அவர்களுடைய வித்தியாசமான மொழிநடை, தோல் நிறம் என்பன மியன்மார் பௌத்த மக்களிடமிருந்து வெளிப்படையாக அவர்களை பிரித்துவிட்டுள்ளது. நோபல் பரிசு பெற்ற மியன்மார் எதிர்க்கட்சி தலைவி ஆங் சான் சூ கியி கூட, இவ்விவகாரத்தில் மௌனம் காத்துவருவதாகவும், ரோஹிங்யா இனத்தவர்களுக்கு ஆதரவாக வெளிப்படையாக குரல்கொடுக்க தயங்கிவருவதாகவும் மேற்குலக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சுமத்திவருகின்றனர்.
இக்கலவரங்களின் போது ராக்கைனிலுள்ள முக்கிய நகரங்களில் உள்ள சுமார் 1,900 வீடுகளும் 8 மத வழிபாட்டுத் தலங்களும் சேதமாக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து இந்நகரங்களில் மாலை 7 மணியிலிருந்து காலை 5 மணி வரை அவசர காலச் சட்டம் அமுல் படுத்தப் பட்டிருந்தது.
மியான்மாரில் ஏற்கனவே ஜூன் மாதம் சிறுபான்மையினத்தைச் சேர்ந்த பெண்ணை கற்பழித்த விவகாரம் காரணமாக மூண்ட கலவரத்தால் 90 பேர் கொல்லப் பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மியான்மாரில் ஏற்கனவே ஜூன் மாதம் சிறுபான்மையினத்தைச் சேர்ந்த பெண்ணை கற்பழித்த விவகாரம் காரணமாக மூண்ட கலவரத்தால் 90 பேர் கொல்லப் பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக