தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

26.10.12

சூடான் மீது இஸ்ரேல் ராக்கட் தாக்குதல்


கடந்த ஒன்றரை ஆண்டு காலத்திற்கு பிறகு சூடான் தலைநகர் கார்டுமில் உள்ள இராணுவத தளவாட உ ற்பத்தித் தொழிற்சாலை மீது நேற்று திடீர் ராக்கட் தா க்குதல் நடாத்தப்பட்டுள்ளது.இந்தத் தாக்குதலில் தொழிற்சாலை சேதமடைந்ததுடன் இருவர் மரணம டைந்துள்ளார்.இது குறித்து இன்று கருத்துரைத்த சூ டானின் கலாச்சார அமைச்சர் அகமட் பிலால் ஒஸ் மான் இந்தத் தாக்குதலை இஸ்ரேலே நடாத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார்.தமது
நாட்டின் மீது பழிக்குப் பழியும் வஞ்சமும் தீர்க்க இஸ்ரேல் செய்த நாசகார செயல் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது இவ்விதமிருக்க கடந்த மார்ச் மாதம் மாலி நாட்டின் அதிபர் அமாடு ரோமனி ரோரு இராணுவத்தின் சதிப்புரட்சியால் பதவி இழந்தது தெரிந்ததே.
அதைத் தொடர்ந்து ஆபிரிக்க யூனியன் ஜனநாயகம் செத்து சுண்ணாம்பான மாலி நாட்டை தனது அணியில் இருந்து விலத்தி வைத்திருந்தது.
நேற்று நடைபெற்ற பேச்சுக்களின் பின்னர் மாலியில் உள்ள இராணுவ சர்வாதிகார அரசு வரும் ஏப்ரலில் பொதுத் தேர்தலை நடாத்த உடன்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து ஜனநாயக நீரோட்டத்தில் அந்த நாடு வருவதற்கான படிமுறையான வேலைத்திட்டத்தையும் முன் வைத்த காரணத்தால் மறுபடியும் ஆபிரிக்க யூனியனில் முழு உறுப்புரிமையுடன் இணைக்கப்படவுள்ளது.
மறுபுறம் வரும் நவம்பர் 6ம் திகதி நடைபெறவுள்ள அமெரிக்கத் தேர்தலில் அமெரிக்காவாழ் முஸ்லீம்கள் யாருக்கு வாக்களிப்பார் என்ற சுவாரஸ்யமான கேள்வி எழுந்துள்ளது.
ஒவ்வொரு நாலுக்கும் ஒருவர் என்ற அடிப்படையில் முஸ்லீம்கள் யாருக்கு வாக்களிப்பதென இன்றுவரை முடிவு செய்யாமல் இருக்கிறார்கள்.
தேர்தலுக்கு மேலும் 15 தினங்களே இருக்கும் நிலையில் இவர்கள் இன்னமும் முடிவு செய்யவில்லை என்கிறார்கள்.
அதேவேளை 68 வீதமான முஸ்லீம்கள் ஒபாமாவுக்கும், ஏழு வீதமான முஸ்லீம்கள் மிற் றொம்னிக்கும் வாக்களிப்பர் என்றும் முடிவெடுக்காத 25 வீதமும் கடைசியில் அந்தர் பல்டியடித்து ஒபாமா பக்கம் திரும்பும் என்றும் புதிய கணிப்புக்கள் கூறுகின்றன.
ஏற்கெனவே குடிகாரரின் வாக்குகளை அதிகம் பெறும் நிலையில் உள்ள ஒபாமா இப்போது முஸ்லீம்களிடமும் அதிக ஆதரவை பெற்றுள்ளார்.

0 கருத்துகள்: