கெய்ரோ:எகிப்தின் முன்னாள் நிதியமைச்சர் யூசுஃப் புத்ரோஸ் காலிக்கு ஊழல் வழக்கில் 30 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.ஆனால் கலியை இதுவரை கைதுச்செய்ய முடியாததால் அவர் ஆஜர்படுத்தப்படாமலேயே நீதிமன்றம் இத்தண்டனையை விதித்துள்ளது.
தலைமறைவாக இருப்பதால் யூசுஃப் புத்ரோஸ் காலிக்கு மேல்முறையீடு செய்யவியலாது. அதேவேளையில் காலியின் குடியுரிமை குறித்து பிரச்சனைகள் இருப்பதாக எகிப்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எகிப்தை தவிர லெபனான், அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளின் பாஸ்போர்ட்டுகளும் காலி வசம் இருப்பதால் கைதுச்செய்ய இடையூறு இருப்பதாக சட்டநிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.இதைத்தவிர இஸ்ரேலின் குடியுரிமையையும் காலி பெற்றுள்ளதாக கருதப்படுகிறது. லண்டனில் இஸ்ரேலி தூதரகம் மூலமாக இதுத்தொடர்பான தகவல் எகிப்திய உள்துறை அமைச்சகத்திற்கு கிடைத்தது. காலி இஸ்ரேலில் வீட்டை சொந்தமாக வாங்கியுள்ளதாகவும், குடும்பத்தினருடன் இஸ்ரேலில் நிரந்தரமாக தங்குவதற்கு தயாராகிவருவதாகவும் எகிப்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக