முஸஃபர்நகர்:குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திரமோடியை புகழ்ந்து பேட்டியளித்ததாக கூறப்படும் தாருல் உலூம் தேவ்பந்த் இஸ்லாமிய கல்வி கலாசாலையின் துணைவேந்தர் குலாம் முஹம்மது வஸ்தன்வியை விசாரணை பூர்த்தியான பிறகே நீக்கியதாக தேவ்பந்த் தாருல் உலூம் தெரிவித்துள்ளது.
வஸ்தன்விக்கு எதிராக குற்றச்சாட்டுகளையெல்லாம் விசாரணைச் செய்த அறிக்கையை மஜ்லிஸே ஷூரா விவாதித்தபிறகே அவரை வெளியேற்றியது
என தேவ்பந்த்தில் நியமன துணைவேந்தர் மெளலானா அப்துல் காஸிம் நுஃமானி அறிவித்துள்ளார்.தேவ்பந்த் விசாரணைக்கு நியமித்த 3 உறுப்பினர்களை கொண்ட குழுவின் அறிக்கை பூரணமற்றது எனக்கூறி மறுவிசாரணைக்கு புதிய குழுவை நியமிக்க வஸ்தன்வி கோரிக்கை விடுத்திருந்தார்.
2002-ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த முஸ்லிம் இனப்படுகொலையை முஸ்லிம்கள் மறக்கவேண்டும் எனவும், மோடியின் மாநிலத்தில் முஸ்லிம்கள் எவ்வித பாரபட்சத்தையும் அனுபவிக்கவில்லை எனவும் வஸ்தன்வி பேட்டியளித்ததாக செய்திகள் வெளியாயின.
இதனைத் தொடர்ந்து தேவ்பந்திலும், வெளியேயும் அவருக்கு எதிராக கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து வஸ்தன்வியின் அதிகாரங்கள் சுருக்கப்பட்டு கடந்த மாதம் 24-ஆம் தேதி உயர்மட்ட கவுன்சில் வஸ்தன்வியை வெளியேற்றியது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக