துபாய்: துபாய் இந்தியன் முஸ்லிம் அசோஷியேஷன் (ஈமான்) வருடந்தோறும் தமிழக பாரம்பர்யத்துடன் கூடிய நோன்புக் கஞ்சியினை வழங்கி வருகிறது.
இதை தமிழர்கள் மட்டுமன்றி வட இந்தியர்கள், அரேபியர், ஆப்பிரிக்கர், பங்களாதேஷ், பாகிஸ்தான், சீனர்கள் உள்ளிட்ட பலரும் இன, மத வேறுபாடின்றி அருந்தி வருகின்றனர்.
இந்த ஏற்பாடுகள் ஈமான் அமைப்பினரால் துபாய்
தேரா பகுதியில் உள்ள குவைத் பள்ளி என்றழைக்கபடும் லூத்தா ஜாமிஆ மஸ்ஜிதில் நடைபெற்று வருகின்றன.
தினமும் 5000 க்கும் மேற்பட்டோர் இந்த இஃப்தார் என்றழைக்கப்படும் நோன்பு துறப்பு நிகழ்வில் பங்கேற்கின்றனர். இதில் நோன்புக் கஞ்சியுடன், சமோசா, வடை, பழம், மினரல் வாட்டர், பேரித்தம் பழம் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. இதற்காக தினமும் சுமார் 14,000 திர்ஹம் செலவிடப்படுகிறது.
சகோதரத்துவத்தை வலியுறுத்தும் வகையில் இத்தகைய நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன என்கிறார் ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் ஏ. லியாக்கத் அலி.
முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் 150 பேருடன் துவங்கிய இச்சிறு நிகழ்வு இன்று அமீரக மக்கள் வியக்கும் வண்ணம் பெருமையுடன் நடைபெற்று வருகிறது.
சமீபத்தில் இங்கு வருகைபுரிந்த இந்திய கன்சல் ஜெனரல் வேணு ராஜாமணி மற்றும் பல்வேறு பிரமுகர்கள் ஈமான் அமைப்பினரின் மனிதாபிமானப் பணியினைப் பாராட்டினர்.
இப்பணி ஈமான் அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் சையத் எம். ஸலாஹுத்தீன், கல்விக்குழுத் தலைவர் அல்ஹாஜ் பி.எஸ்.எம். ஹபிபுல்லாஹ், வழிகாட்டுதலுடன் ஈமான் அமைப்பின் மக்கள் தொடர்புச் செயலாளர் ஏ. முஹம்மது தாஹா தலைமையில் விழாக்குழு செயலாளர் யஹ்யா முஹ்யித்தீன், ஊடகத்துறை பொறுப்பாளர் முதுவை ஹிதாயத், கல்விக்குழு செயலாளர் ஹிதாயத்துல்லாஹ், ஜமாஅத் ஒருங்கிணைப்பாளர் ஹமீது யாசின் மற்றும் தன்னார்வ தொண்டர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக