பெங்காசி, ஏப். 9- லிபியாவில் அதிபர் கடாபிக்கு எதிராக கடுமையான போராட்டம் நடைபெற்று வருகிறது. கிளர்ச்சியாளர்கள் மீது கடாபி ஆதரவு ராணுவம் தாக்குதல் நடத்துவதால் அமெரிக்கா உள்ளிட்ட கூட்டு படையினர் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், கடாபியுடன் கிளர்ச்சியாளர்கள் பேச்சு வார்த்தை நடத்த உதவுவதாகவும் அமைதிக்கான செயல் திட்டம் தன்னிடம் இருப்பதாகவும் துருக்கி பிரதமர் டய்யிப் எர்டோகன் தெரிவித்தார்.
ஆனால், அதை கிளர்ச்சியாளர்கள் நிராகரித்து விட்டனர். இது குறித்து கிளர்ச்சியாளர்களின் செய்தி தொடர்பாளர் கர்னல் அகமது பானி கூறுகையில், "துருக்கி மக்களின் நிலையை நாங்கள் மதிக்கிறோம். ஆனால், எர்டோகனின் வார்த்தைகள் துருக்கி மக்களின் உணர்வை வெளிப்படுத்துவதாக இல்லை" என்றார்.
இதற்கிடையே, மிஸ்ரதா நகர துறைமுகத்தை நோக்கி செல்லும் முக்கிய சாலையில் கடாபி ஆதரவு படையினருக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடுமையான சண்டை நடைபெறுகிறது. அதே நேரத்தில், அமெரிக்க கூட்டு படையினர் நடத்திய தாக்குதலில் தவறாக குண்டு பொழிந்ததால் கிளர்ச்சியாளர்கள் 4 பேர் பலியாகினர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக