தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

11.4.11

அமெரிக்காவிற்கு எதிராக மீண்டு ஆயுதப் போராட்டம் – முக்ததா அல் ஸத்ர்


பாக்தாத்:ஈராக்கிலிருந்து அமெரிக்க ராணுவம் பின்வாங்கும் வரை அந்நாட்டு படையினருக்கு எதிராக ஆயுத போராட்டம் தொடரும். இதற்காக மெஹ்தி ராணுவத்தை புனரமைப்போம் என அமெரிக்க எதிர்ப்பு போராட்ட போராளியும், ஷியா அறிஞருமான முக்ததா அல் ஸத்ர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முன்னாள் அதிபர் சதாம் ஹுசைனின் ஆட்சி அகற்றப்பட்டு எட்டு ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி நடந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு உரை நிகழ்த்தினார் ஸத்ர்.
ஈராக்கில் அமெரிக்க அந்நிய படையினருக்கு மட்டுமல்லாமல், அவர்களுடன் ஒப்பந்த வேலைகளில் ஈடுபட்டிருக்கும் அனைத்து தொழிலாளர்களுக்கும் ஸத்ர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இனிமேலும் அமெரிக்கா ஈராக்கிலிருந்து வாபஸ் பெறாவிட்டால் மெஹ்தி ராணுவத்தின் பணிகளை வலுப்படுத்துவோம் என ஸத்ர் தெரிவித்தார்.
ஸத்ரின் அறிக்கையை மூத்த தலைவர் ஆதரவாளர்களுக்கு முன்பு வாசித்துக் காட்டினார். ஈராக் அரசு மக்களுக்கும் வேலையும், பாதுகாப்பும் அளிப்பதில்லை என நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் குற்றஞ்சாட்டினர்.
முன்பு ஈராக்கில் ஆக்கிரமிப்பு படையினருக்கு எதிராக தொடர்ந்து தாக்குதலை நடத்திவந்த மெஹ்தி ராணுவம் அமைதியை ஏற்படுத்துவதற்காக கடந்த 2007-ஆம் ஆண்டிலிருந்து ஸத்ரின் உத்தரவின்படி தாக்குதல்களை கைவிட்டது.

0 கருத்துகள்: