தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

11.4.11

27 ஆண்டுகளாக பாகிஸ்தான் சிறையில் இருந்த இந்தியர் விடுதலை


லாகூர், ஏப். 8- பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தவர் கோபால் தாஸ். இவர் பாகிஸ்தானில் இந்தியாவுக்காக உளவு பார்த்ததாக 1984-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். 3 ஆண்டு கால விசாரணைக்குப் பிறகு அவருக்கு 1987-ம் ஆண்டு கோர்ட்டு ஆயுள் தண்டனை விதித்தது. அவர் இந்த ஆண்டு இறுதியில் விடுதலை செய்யப்பட இருந்தார்.
இந்தநிலையில் இந்திய சுப்ரீம் கோர்ட்டின் 2 நீதிபதிகள் கொண்டு பெஞ்சு, தாசுக்கான தண்டனை காலத்தை குறைத்து மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டது. இதை ஏற்றுக்கொண்டு பாகிஸ்தான் ஜனாதிபதி சர்தாரி தாசின் தண்டனையை குறைத்தார். இதை தொடர்ந்து தாஸ் நேற்று விடுதலை செய்யப்பட்டார்.

லாகூரில் உள்ள கோட் லக்பத் ஜெயிலில் இருந்து, இந்திய-பாகிஸ்தான் எல்லையான வாகாவுக்கு தாஸ் அழைத்து வரப்பட்டார். அங்கு அவர் பாகிஸ்தான் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அதன்பின்னர் அவரது கைவிலங்குகள் அகற்றப்பட்டு அவரை பாகிஸ்தான் போலீசார், எல்லையில் உள்ள இந்திய போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

0 கருத்துகள்: