தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

11.4.11

லியோனிக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ்


தி.மு.க.,விற்காக தேர்தல் பிரச்சாரம் செய்த ஆசிரியர் திண்டுக்கல் லியோனிக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.திண்டுக்கல் செயின்ட் மேரீஸ் மேல்நிலைபள்ளி ஆசிரியர் லியோனி. பட்டிமன்ற பேச்சாளர். கடந்த சில மாதங்களாக சம்பளம் இல்லாத விடுமுறையில் உள்ளார்.பிரசாரம்: சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வின் நட்சத்திர பேச்சாளராக அறிவிக்கப்பட்ட இவர் பல ஊர்களில் அக்கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். தேர்தல் கமிஷனுக்கு இதுகுறித்து புகார் சென்றது.
நோட்டீஸ்: தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி,
திண்டுக்கல் முதன்மை கல்வி அதிகாரி அசோகன், லியோனி பணிபுரியும் பள்ளியிடம் விளக்கம் கேட்டுள்ளார்.
விருப்ப ஓய்வு: தேர்தல் கமிஷன் நடவடிக்கையையறிந்த லியோனி விருப்ப ஓய்வு கேட்டு விண்ணப்பித்துள்ளார். இக்கடிதத்தை ஏற்க முடியாது என கல்வித்துறை கூறியுள்ளது.
கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,”லியோனி அரசு நிதிஉதவி பெறும் பள்ளியில் பணிபுரிகிறார். சம்பளம் இல்லாத விடுமுறையில் இருந்தாலும் அவர் பணியில் இருப்பதாக தான் அர்த்தம். கட்சிக்காக பிரசாரம் செய்ததற்காக நாங்கள் நேரிடையாக நடவடிக்கை எடுக்க முடியாது. அவர் பணிபுரியும் பள்ளியிடம் விளக்கம் கேட்டுள்ளோம். விருப்ப ஓய்வு என்றால் 6 மாதத்திற்கு முன் விண்ணப்பிக்க வேண்டும். தற்போது விண்ணப்பிப்பதை ஏற்க முடியாது. அவரது பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க தாமதித்தால் மாவட்ட கல்விதுறை நடவடிக்கையில் ஈடுபடும்,’என்றார்

0 கருத்துகள்: