தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

1.5.11

முஷாரப்பை அறிவிக்கப்பட்ட குற்றவாளியாக பிரகடனப்படுத்தியது பாகிஸ்தான்



பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசீர் கொலை வழக்கில், பர்வீஸ் முஷாரப்பை 'அறிவிக்கப்பட்ட குற்றவாளி' என பாகீஸ்தானின் தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் பிரகடனப்படுத்தியுள்ளது.
அண்மைக்காலமாக இங்கிலாந்தில் தஞ்சமடைந்திருந்த முஷாரப் பெனாசீர் கொலை வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு முன்னர் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தார்.


ஆனால் வெளிநாட்டில் இருப்பதால் அவருக்கு சம்மன் அனுப்ப முடியவில்லை. இந்நிலையில், இங்கிலாந்து
அதிகாரிகளிடம் இது குறித்து விளக்கினோம். முஷாரப்பிடம் சம்மனை சேர்க்கும் படி கூறினோம். ஆனால் அவர்கள் எங்களுக்கு உதவ மறுத்துவிட்டனர்.  இரு நாடுகளுக்கும் இடையில் கைதிகள் பரிவர்த்தனைக்கான ஒப்பந்தம் எதுவும் செய்து கொள்ளப்படவில்லை என அவர்கள் கூறிவிட்டனர். இதனால் முஷாரப்பை அறிவிக்கப்பட்ட குற்றவாளியாக பிரகடனப்படுத்த வேண்டும்' என பாகிஸ்தான் நீதிமன்றில் அரசு தரப்பு வக்கில் மீண்டும் வழக்கு தொடுத்தார்.

அவரது மனு கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் 'முஷாரப் அறிவிக்கப்பட்ட குற்றவாளி' இந்த பிரகடனம் அனைத்து பத்திரிகைகளிலும் விளம்பரமாக பிரசுரிக்கப்படும். முஷாரப்பின் சொத்துக்களும் முடக்கி வைக்கப்படும். முஷாரப்பை கைது செய்யும் சந்தர்ப்பம், பாகிஸ்தானுக்கு இருக்குமாயின் உடனடியாக அந்நடவடிக்கையை மேற்கொள்ளும்' என தீர்ப்பு வழங்கியுள்ளது.  எனினும் தனக்கு சம்மன் ஏதும் கிடைக்கவில்லை என முஷாரப் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

முன்னதாக அவர் சீன்.என்.என் செய்தி சேவைக்கு அளித்த செவ்வி ஒன்றில், ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்டது, அமெரிக்க இராணுவத்தின் அராஜக செயல் எனவும், அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா ஒரு ஆணவம் கொண்டவர் எனவும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: