ஒபாமா ஹவாய் தீவுகளில் தான் பிறந்தார் என்பதை உறுதிப்படுத்தும் இப்பிறப்பு அத்தாட்சிப்பத்திரம், ஒபாமா ஜனாதிபதி பதவியை வகிப்பதற்கான சட்ட அந்தஸ்த்து குறித்த சர்ச்சைகளை ஒரு வழியாக முடிவுக்கு கொண்டுவந்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலின் போது, தனது பிறப்பு விபரங்களை உள்ளடக்கிய சிறிய படிவமொன்றையே ஒபாமா வழங்கியிருந்த நிலையில், அவரது உண்மையான பிறப்பு சான்றிதழின் பிரதிகளை கோரி, எதிர்க்கட்சிகள் கடும் அழுத்தம் கொடுத்துவந்தன.
இந்நிலையில், தனது பிறப்பு சான்றிதழை வெளியிட்டுள்ள ஒபாமா, இவ்வாறான சிறிய விடயங்களுக்கு நாம் தடுமாற்றமடையும் வரை எமது பிரச்சினைகளுக்கு நாம் தீர்வு காணப்போவதில்லை என பதிலடி கொடுத்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக