இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் உள்ள உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ. தீவிரவாத ஆதரவு அமைப்பு என்று அமெரிக்கா பட்டியலிட்டது. இதனால் கோபம் அடைந்த பாகிஸ்தான் பிரதமர் கிலானி, ஐ.எஸ்.ஐ. பற்றி பொய் பிரசாரம் நடக்கிறது என்று குறிப்பிட்டார்.
அவர் இஸ்லாமாபாத்தில் நடந்த ஒரு விழாவில் பேசியபோது இதை குறிப்பிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-
ஐ.எஸ்.ஐ. ஒரு உளவு நிறுவனம் ஆகும். உளவு நிறுவனங்கள் அனைத்தும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகின்றன. அரசாங்கத்தின் அனுமதி இல்லாமல் அவர்கள் எதையும் செய்யமுடியாது. ஐ.எஸ்.ஐ. ஏதாவது செய்தால் அது அரசாங்கத்தின் ஆதரவுடன் செய்யமுடியும். நாங்கள் அவர்களுடன் இருக்கிறோம். இவ்வாறு பிரதமர் கிலானி கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக