2008-ம் ஆண்டு மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட பெண் சாமியார் சாத்வி பிரக்யாசிங்கின் ஜாமின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கடந்த 2008-ம் ஆண்டு செப்டம்பர் 29-ம் தேதி மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள மலேகானில் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது. இதில் 9 பேர் பலியாயினர்.பலர் காயம் அடைந்தனர். இது தொடர்பாக மகாராஷ்டிர பயங்கரவாத, குற்றத்தடுப்பு போலீசார்
வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் தொடர்புடையதாக பெண் சாமியார் பிரக்யாசிங் தாகூர் கடந்த 2008-ம் ஆண்டு அக்டோபர் மாதம் பயங்கரவாத எதிர்ப்பு படையினரால் கைது செய்யப்பட்டார். ஜாமின் கோரி உச்ச நீதிமன்றத்தில் இவர் தாக்கல் செய்த மனு நீதிபதிகள் ஜெ.எம்.பன்சால், எச்.எல்.கோகலே ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவில் ஜாமினுக்காக தாக்கல் செய்த ஆவணத்தில் எந்த முகாந்திரமும் இல்லை என கூறி ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக