தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

24.9.11

இருபது ஆண்டுகளுக்கு முன் ஏவப்பட்ட செயற்கைக்கோள், செயலிழந்து பூமியில் விழுகிறது ?


இருபது ஆண்டுகளுக்கு விண்ணுக்கு ஏவப்பட்ட ஒரு செயற்கைக்கோளின் எஞ்சிய பாகங்கள், இன்று அல்லது நாளை பூமியில் விழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாசா விண்வெளி ஆராச்சி மையம் அனுப்பிய இந்தச் செயற்கைக்கோள், செயலிழந்த நிலையில் விண்வெளியில் சுற்றி வந்தது. தற்போது இது பூமியின் வளிமண்டலத்தில் நுழையவுள்ளது. அவ்வாறு அது வளிமண்டலத்தில் நுழைகையில் ஆயிரத்துக்கும் அதிகமான துண்டுகளாக வெடித்துச் சிதறும் வாய்ப்பு உள்ளதாகத்
தெரிவிக்கப்படுகிறது.
5670 கிலோ எடையுள்ள இச் செயற்கைக் கோளில், இவ்வாறு வெடித்துச் சிதறும் பகுதிகளில் அநேகமானவை எரிந்து சாம்பலாகிவிடும் என்ற போதிலும், சுமார் 26 துண்டுகள் பூமியில் விழக் கூடிய அபாயம் உள்ளதாகவே தெரிவிக்கப்டுகிறது.
இப்பாகங்கள் சுமார் 150 கிலோ வரை எடை வரையில் இருக்கலாம் எனவும், இது விழக் கூடியகாலத்தைத் துல்லியமாகக் கணிக்க முடியாவிட்டாலும், இன்று அல்லது நாளை பூமியில் விழலாம் எனவும், அவை அநேகமாக கடலில் அல்லது கனடாவின் வட பகுதி, அமெரிக்காவின் தென் பகுதி ஆகிய பிரதேசங்களில் விழும் சாத்தியங்கள் உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வின்வெளியில் செயல் இழக்கும் செயற்கைக் கோள்களில் அநேகமானவை விண்வெளியிலேயே சுற்றிக் கொண்டிருக்கும். இதையும் மீறி வளிமண்டலத்துள் நுழைபவை தன்னியக்கமாகவே எரிந்து சாம்பலாகி விடும். இதையும் மீறி விழுபவற்றைக் கடலில் விழுத்தும் முயற்சிகளும் மேற்கொள்ளப்படுவதுண்டு ஆனால் இந்தச் செயற்கைக் கோளில் அதற்கான சாத்தியங்கள் எதுவும் இல்லை என்பதாலேயே இது விழுவது குறித்து திட்டவட்டமாக எதையும் அறிவிக்க முடியவில்லை என்கிறார்கள் ஆராய்சியாளர்கள்.
1991ம் ஆண்டில் விண்ணுக்கு அனுப்பப்பட்ட யூ.ஏ.ஆர்.எஸ். எனும் இச் செயற்கைக் கோள், 14 ஆண்டு காலம் தொடர்ச்சியாக புவியின் வளிமண்டலத் தகவல்களைப் பூமிக்கு அனுப்பி வைத்ததிருந்ததை ஆய்வாளர்கள் தெபருமையோடு குறிப்பிடுகின்றார்கள்.

0 கருத்துகள்: