தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

24.9.11

செப்.11 தாக்குதலுக்காக, பாகிஸ்தானில் 311 தற்கொலை தாக்குதல்கள்! : ஹினா ரப்பானிகர்


பாகிஸ்தான் புலனாய்வு பிரிவினர் மீது (ISI) மீது அமெரிக்கா தேவையில்லாமல்,
குற்றச்சாட்டுக்களை சுமத்தினால் பாகிஸ்தானுடனான நட்பை இழக்க வேண்டிவரும் என பாகிஸ்தானின் வெளியுறவு துறை அமைச்சர் ஹினா ரப்பானிகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆப்கான் தலைநகர் காபூலில்,
அமெரிக்க தூதரகத்தை தாக்கிய தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தால் புலனாய்வு அமைப்பு புகலிடம் அளித்து வருவதாக அமெரிக்க இராணுவ தளபதி மைக்முல்லன் பகிரங்க குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்தார்.

இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள ரப்பானி, ஜியோ தொலைக்காட்சியில் அளித்த பேட்டியில் அமெரிக்காவின் இரட்டை கோபுர தகர்ப்பு தாக்குதலின் பின் அங்கு இதுவரை எந்தவொரு தாக்குதலும் நடத்தப்படவில்லை. ஆனால் பாகிஸ்தானில் இதுவரை, 311 தற்கொலை படை தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

பாகிஸ்தான் அப்பாவி பொது மக்கள் மீது அமெரிக்க ஆளில்லா விமானமும், தாக்குதல் நடத்திவருகிறது. இந்நிலைமைகளை அமெரிக்கா புரிந்து கொள்ள வேண்டும். பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புக்களுக்கு ஒரு போதும் ஐ.எஸ்.ஐ அடைக்கலம் கொடுத்ததில்லை என அவர் கூறினார்.

0 கருத்துகள்: