பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வீஸ் முஷாரப் மீது மீண்டும் சப்பாத்து வீசி தாக்குதல் நடத்த
முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று (சனிக்கிழமை) லண்டனில் பொதுநிகழ்வு ஒன்றில் உரையாற்றுவதற்கு முற்பட்ட போதே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.லுட்டொன் நகரில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் காஷ்மீரி சமூகத்தை பற்றி அவர் உரை
நிகழ்த்த்விருந்தார்.அப்போது ஒருவர் சப்பாத்தை கழற்றி முஷாரப் மீது வீச முற்பட்டார். உடனடியாக பாதுகாப்பு அலுவலர்கள், அவரை பிடித்து வெளியே கொண்டு சென்றனர். இன்னொருவர் முஷாரப்பிற்கு எதிரான ஸ்லோக அட்டைகள் பிடித்தார்.
கடந்த பெப்ரவரி மாதம் பிரிட்டனில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றிலும் முஷாரப் மீது சப்பாத்து வீசப்பட்டது. எனினும் அது அவரில் படவில்லை. 1999ம் ஆண்டு இராணுவ சதி புரட்சி மூலம் பாகீஸ்தான் அரசை கைப்பற்றிய பர்வீச் முஷாரப், 9 வருடங்கள் ஆட்சி நடத்திவந்தார். 2008 இல் பதவி விலகிய அவர் தற்போது லண்டனில் வாழ்ந்து வருகிறார்.
அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் புஷ் மீது ஈராக் ஊடகவியலாளர் முண்டாசீர் அல் ஷைடி கடந்த 2008ம் ஆண்டு, இந்த சப்பாத்து வீசும் புதிய தாக்குதல் முறையை அறிமுகப்படுத்தி வைத்தார்.
அதை தொடர்ந்து இந்திய உள்துறை மைச்சர் ப.சிதம்பரம், பாகிஸ்தான் அதிபர் அசிஃப் அல் சர்தாரி, சீன பிரதமர் வென் ஜியாபோ ஆகியோர் மீது இவ்வாறு சப்பாத்து வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக