தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

20.12.11

ரஷ்யாவில் பகவத் கீதைக்கு தடை - வழக்கின் தீர்ப்பு 28ம் திகதி

ரஷ்யா நாட்டில் பகவத் கீதையை தடை செய்யக் கோரும் வழக்கின் தீர்ப்பை வரும்28ம் திகதி வழங்கவுள்ளதாக சை பீரியா மாகாணத்தில் டாம்ஸ் நகர கோர்ட் தெரிவித்துள் ளது.பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதா எழுதிய ரஷ்ய மொ ழிமாற்ற பகவத் கீதை ஒரு தீவிரவாத இலக்கியம் என்று முத்திரை குத்தப்பட்டு தடை விதிக்கவுள்ளதாக தெரியவரு கின்றது.எவ்வாறாயினும் பகவத் கீதை உலகம் முழுதும்
மதிக்கப்படும்
புத்தகம் அதை தடை செய்வதை ஏற்க முடியாது என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. அதனால் இவ்வழக்கின் கருத்தைகேட்டறிந்த நீதிபதி வருகிற 28ம் தேதி தனது தீர்ப்பினை வாசிக்க உள்ளார்.   இதற்கிடையே, அரசு ஊழியர்களுக்கு எதிரான புகார்களை விசாரிக்கும் அதிகாரி விளாடிமிர் புதின், பகவத் கீதை, உலகம் முழுவதும் மதிக்கப்படும் புத்தகம் என்றும், அதற்கு தடை கேட்பதை ஏற்க முடியாது என்றும் கூறியுள்ளார். மேலும், ரஷ்யாவில் வசித்து வரும் பல்வேறு நாட்டு இந்துக்கள் ஒன்று கூடி, 'ரஷ்ய இந்து கவுன்சில்' என்ற அமைப்பை தொடங்கி உள்ளனர்.

0 கருத்துகள்: