தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

26.12.11

கியூபாவில் 2.900 அரசியல் கைதிகள் விடுதலை

கியூபா அரசு தனது ஜனநாயகத் தன்மையை வெளிக்காட் டுவதற்காக இன்று நத்தார் தின நினைவுகளுக்காக 2900 அரசியல் கைதிகளை சிறையில் இருந்து விடுதலை செய் துள்ளது. இந்த விடுதலையை குற்றவாளிகளின் குடும்ப த்தினர் மற்றும் மதகுருமாருடன் இணைந்து பேசி நடாத் தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இவர்கள் அனைவரு ம் கியூபாவின் சர்வாதிகார அரசின் இருத்தலுக்கு பங்கம் விளைவித்தோர் என்ற
குற்றச்சாட்டில் கைதானவர்களாகும். அடுத்த ஆண்டு கியூபா நாட்டிற்கு பாப்பரசர் விஜயம் செய்ய இருக்கிறார். அவருடைய வருகைக்கு ஒரு பச்சைக்கொடி காட்டுவதற்காகவே இந்தக் காரியத்தை கியூபா செய்துள்ளதாக கருதப்படுகிறது. சத்தியசாய்பாபா கருணாநிதியை சந்தித்து கூவத்தை திருத்த 200 கோடி கொடுத்ததைப் போன்ற நிகழ்வு போலவே கியூபாவிற்குள் பாப்பரசர் வரவு அமைய வாய்ப்புள்ளது. பெரியாரின் கொள்கையில் வந்த கருணாநிதியின் மனைவி ராசாத்தி அம்மாள் சத்தியசாயி பாபாவின் காலில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்தது போல கம்யூனிச கியூபாவும் பாப்பரசர் காலில் விழும் கண்கொள்ளா காட்சியை உலக கம்யூனிஸ்ட்டுக்கள் காணவும் வாய்ப்புள்ளது. இது இவ்விதமிருக்க பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட கெயிட்டியில் இருந்து புறப்பட்ட அகதிகள் படகொன்று கியூபா கரையை அண்டி கவிழ்ந்த காரணத்தால் 21 ஆண்களும் 17 பெண்களுமாக மொத்தம் 38 பேர் மரணித்துள்ளனர். நான்கு பிள்ளைகளுடன் 81 பேர் காப்பாற்றப்பட்டு சர்வதேச செஞ்சிலுவைச் சங்க அகதி முகாமில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

0 கருத்துகள்: