சென்னை, ஜூன். 17- லோக்பால் மசோதா தொடர்பாக தொடர்ந்த வழக்கில் டிராபிக் ராமசாமிக்கு சென்னை உயர் நீதிமன்றம் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தது.
சமூக சேவகர் டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கு தொடர்ந்தார். அதில், ஊழல் ஒழிப்புக்கான லோக்பால் சட்ட மசோதா வரவு கமிட்டியில் தென் மாநிலத்திற்கு பிரதி நிதித்துவம் வழங்க வேண்டும் என்று நான் மத்திய அரசுக்கு மனு கொடுத்திருந்தேன். அம்மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால்,
நீதிபதி சிவஞானம் ஆகியோர் விசாரித்து மனுவை தள்ளுபடி செய்தனர். பின்னர் அவர்கள் கூறும் போது, டிராபிக் ராமசாமி மத்திய அரசுக்கு மனு கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். ஆனால் இம்மனுவை அவரது தனிச் செயலாளர் தான் கொடுத்துள்ளார். எனவே டிராபிக் ராமசாமி நீதிமன்றத்திற்கு தவறான தகவல் கொடுத்துள்ளார். பொதுநல வழக்கு என்ற பெயரில் இது போன்ற வழக்கை தாக்கல் செய்து நீதிமன்ற நேரத்தை வீணடித்துள்ளார். டிராபிக் ராமசாமியின் வயது கருதி அவருக்கு இந்த நீதிமன்றம் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கிறது. அவர் இதை 3 வாரத்தில் தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைய குழுவிடம் செலுத்து வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக