தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

18.6.11

ஈழப்படுகொலை செய்திகளை இருட்டடிப்பு செய்யும் ஊடகங்கள்!


சனல் 4 தொலைக்காட்சி அம்பலப்படுத்திய சிறீலங்கா கொலைக்களம் என்ற ஒரு மணி நேர ஒளிநாடா உலகளவில் பாரிய ஊமைக் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்படியான செய்திகளை பொதுவாக தமிழகத்தின் பத்திரிகைகளும், இணையங்களும் கூடுதல் முக்கியம் கொடுத்து எழுதுவது வழமை. ஆனால் சனல் 4 வெளியான பின்னர் அனைவரும் அடக்கி வாசிப்பதை காணமுடிகிறது.

உண்மை துல்லியமாக வெளிப்படும் நேரம் எதற்காக மௌனம் காக்க வேண்டும் என்ற கேள்வி பல்வேறு உப கேள்விகளை உருவாக்குகிறது.
சனல் 4 நிகழ்வு புலிகளுக்கு ஆதரவானது என்று கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஆனால் அதில் புலிகள் செய்த குற்றச் செயல்களும் பக்கச்சார்பின்றி எடுத்துரைக்கப்படுகிறது.

மேலும் சரணடைந்த ஒருவரை புலி என்ற தலைப்பில் புறந்தள்ள முடியாது. அத்தகையோரை பாலியல் பலாத்காரம் செய்து, சித்திரவதை செய்து, இறக்கும் போது அவமானம் செய்து, இறந்த பின்னும் அவமானம் செய்து, இது எமது நாடு என்று சிங்களத்தில் கொக்கரிப்பதை பார்த்த பின்னரும் தமிழக ஊடகங்கள் மௌனம் காப்பது ஏன்...?

சிந்திக்கவும்: தமிழக பத்திரிக்கைகளில் பெரும்பான்மை பார்பன ஊடகங்கள் அவை என்றும் ஈழத்து இனப்போராட்டத்தை ஆதரித்தது இல்லை. மேலும் புலித்தலைவர் பிரபாகரன் ஒரு மீனவ சமூகத்தை சேர்ந்தவர் இதுவும் ஒரு காரணமாக இருக்கும். ஈழப்போராட்டம் ஒரு பார்ப்பனர் தலைமையில் நடத்தபட்டிருந்தால் அதை சுதந்திர போராட்டம் என்று வர்ணித்து புகழ்பாடி இருப்பார். மற்ற பத்திரிக்கைகள் இந்த பார்பன பத்திரிக்கைகளை ரோல் மாடலாக கொண்டவர்கள்.

0 கருத்துகள்: