14 வது சட்டசபையின் முதல் கூட்டம், வரும் 23ம் தேதி (திங்கள்கிழமை) கூடு கிறது. புதிதாக தேர்ந்தெடுக் கப்பட்ட எம்எல்ஏக்கள் பதவி ஏற்க உள்ளனர். இதற்காக தற்காலிக சபாநாயகராக இந்திய குடியரசு கட்சியின் செ.கு. தமிழரசன் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
அவருக்கு கவர்னர் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். தற்காலிக சபாநாயகருக்கு ஞாயிறன்று (மே 22), கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.
ராஜ்பவனில் காலை 9 மணிக்கு நடக்கும் விழாவில் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.தற்காலிக சபாநாயகர், 23ம் தேதி பகல் 12.30 மணிக்கு கோட்டையில் உள்ள சட்டப்பேரவை அரங்கில் புதிய உறுப்பினர் களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். வரும் 27ம் தேதி காலை 9.30 மணிக்கு சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்தல் நடக்கிறது.
பின் மீண்டும் ஜூன் 3ம் தேதி சட்டப்பேரவை கூடுகிறது. அன்று காலை 10 மணிக்கு கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா உரையாற்று கிறார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக