பிரிட்டன் இளவரசர் வில்லியம்ஸ் திருமணம் மிகவும் ஆடம்பரமாக நடந்து முடிந்து.
ஜூலையில் மொனாகோ இளவரசர் இரண்டாம் ஆல்பர்ட் திருமணம் நடக்கவுள்ள நிலையில் இந்தாண்டில், மிகவும் எளிமையான முறையில் தனது திருமணத்தினை நடத்தவுள்ளார் பூட்டான் நாட்டு மன்னர். வரும் அக்டோபர் மாதம் கல்லூரி மாணவி ஒருவரை கரம் பிடிக்கிறார்.
இவரது திருமணம் சாதராண குடும்பத்தில் நடப்பது போன்று மிகவும் எளிமையான முறையில் நடக்கவுள்ளதாக பூட்டான் அரண்மணை வட்டாரம் கூறியுள்ளது.பூட்டான் மன்னராக இருப்பவர் ஜிக்மி கெய்சர்நெம்ஜியால் வாங்சூக் (31) இவர் கடந்த 2008-ம் ஆண்டு பூட்டான் நாட்டின் மன்னராக தனது தந்தை ஜிக்மிசெங்கியீ முடிதுறந்ததையடுத்து பொறுப்பேற்றார். இந்நிலையில் பூட்டான் பார்லிமென்ட் கூட்டம் திம்புவில் நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசுகையில், மன்னர் ஜிக்மிகெய்சர்நெம்ஜியால் பேசியதாவது:
என் மனதை கவர்ந்த ஜெட்சன்பெய்மா என்ற மாணவியை நான் திருமணம் செய்யவுள்ளேன். எனக்கு வரப்போகும் மனைவி படித்த பெண்ணாக இருக்க வேண்டும். அந்த வகையில் நான் எதிர்பார்த்த அனைத்து தகுதிகளையும் கொண்ட பெண்ணாக ஜெட்சன்பீமாவிடம் உள்ளார். வரும் அக்டோபர் மாதம் எங்கள் திருமணம் மிகவும் எளிய முறையில் நடக்கிறது. இவ்வாறு அவர் கூறிதுடன் தனது வருங்கால மனைவி ஜெட்சன்பீமாவுடன் இணைந்து எடுத்து கொண்ட புகைப்படத்தினையும் காண்பித்தார் மன்னர் ஜிக்மிகெய்சர்நெம்ஜியால். இது குறித்து பூட்டான் பிரதமர் ஜிக்மி தைன்லி கூறுகையில், மன்னரின் திருமணத்தை நாடோ ஆவலோடு எதிர்பார்க்கிறது, என்றார். சமீபத்தில் நடந்து முடிந்த இங்கிலாந்து இளவசர் வில்லியம்- காதேமிடில்டென், மற்றும் ஜூலையில் நடக்கவுள்ள மொனாகோ இளவரசர் திருமணம் போன்று அல்லாமல் எளிய முறையில் பூட்டான் மன்னர் திருமணம் நடக்கவுள்ளதாக அந்நாட்டிலிருந் வெளிவரும் பத்திரிகைகள் தெரிவிக்கின்றன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக