தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

22.5.11

ஊழல் விசாரணைப் பட்டியலில் அடுத்து; அமைச்சர் தயாநிதி மாறன்..?


ஊழல் விவகாரங்களில் தொடரப்பட்டு வரும் விசாரணைகளில், தமிழகத்திலிருந்து அடுத்து விசாரணைக்கு அழைக்கப்படும் பிரமுகராக, தயாநிதிமாறன் இருக்கலாம் என சிபிஐ வட்டாரத் தகவல்கள் கசிந்திருப்பதாகத்
தமிழகச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஸ்பெக்டரம் 2ஜி அலைக்கற்றை ஊழல்விவகாரத்தை துருவி ஆராய்ந்து வரும் சிபிஐ, கடந்த 2001-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டுவரை உள்ள 6 ஆண்டுகளில் தொலைதொடர்புத்துறையில் நடந்த முறைகேடுகள் குறித்தும், பூர்வாங்க விசாரணைகளைத்  நடத்தி வருகிறது.

தொடக்க நிலை விசாரணைகளின் அடிப்படையிலான முதல் தகவல் அறிக்கை வரும் ஜூலை 6-ம் தேதிக்கு முன்தாகத் தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அச் செய்திகள் தெரிவிக்கின்றன. இவ்வாறு சமர்ப்பிக்கப்படும்முதல் அறிக்கையில், குறித்த காலப் பகுதியில் தொலைதொடர்புத்துறை அமைச்சராகவும், தற்போதைய  ஜவுளித்துறை அமைச்சருமான தயாநிதி மாறனின் பெயரை சேர்க்க சி.பி.ஐ. முடிவு செய்துள்ளதாக மேலும் அத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 கருத்துகள்: